டமாஸ்கஸ்: சிரியாவில் இரு பஸ்கள் மோதிக் கொண்டதில் 35 பேர் பலியாகினர்.
இதுபற்றிய விவரம் வருமாறு;
சுக்னா, பால்மைரா பகுதிகளுக்கு இடையே டமாஸ்கஸ் டெய்ர் எஸ்சோர் சாலையில் இரு பஸ்கள் சென்று கொண்டிருந்தன. ஒரு பஸ்சில் பாதுகாப்பு படையினரும், மற்றொரு பஸ்சில் பொதுமக்களும் பயணித்துக் கொண்டிருந்தனர்.
இந்த இரு பஸ்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் அதில் பயணித்தவர்களில் 35 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
விபத்துக்கான காரணம் என்ன என்பது பற்றிய எந்த விவரங்களும் வெளியாகவில்லை.
