தமிழ்நாட்டில் சிறு துறைமுகம் வழியாக போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ள லட்சிய ஜனநாயக கட்சித் தலைவரும் புதுச்சேரி எம்.எல்.ஏ-வுமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், அனைத்துச் சிக்கல்களுக்கும் பேசும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தன் சொந்தத் துறையிலேயே நடந்த போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் இதுவரை ஒரு சிறிய விளக்கம் கூட அளிக்காமல் மௌனம் காப்பது ஏன் என்று காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை- மாதவரத்தில் நடைபெற்ற லட்சிய ஜனநாயக கட்சியின் மனித உரிமைகள் அணி நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி அக்கட்சியின் தலைவரும் புதுச்சேரி மாநில காமராஜ் நகர் எம்.எல்.ஏ-வுமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவரும் புதுச்சேரி மாநில காமராஜ் நகர் எம்.எல்.ஏ-வுமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கிப் பேசினார். இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசு பற்றியும், கட்சியின் கொள்கைகள் பற்றியும் விமர்சித்துப் பேசினார். குறிப்பாக சிறு துறைமுகம் வழியாக போதைப்பொருள் கடத்தப்படுவதாகவும் அந்தத் துறையின் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வாய் திறக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை- மாதவரத்தில் நடைபெற்ற லட்சிய ஜனநாயக கட்சியின் மனித உரிமைகள் அணி நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினேன். நிகழ்வில் தமிழ்நாடு அரசு பற்றியும், கட்சியின் கொள்கைகள் பற்றியும் எடுத்துரைத்தேன். இவ்விழாவில் LJK மாநில பொதுச்செயலாளர் நெல்லை ஜீவா, மனித உரிமைகள் அணி மாநிலச்செயலாளர் டாக்டர் ஆர்.ராஜ்குமார், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். #jcm #ljk #puducherry #humanrights #publicwelfare
— Jose Charles Martin (@sscharles) October 29, 2026
நிகழ்வில் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பேசியதாவது: “எல்லோருக்கும் தமிழ்நாட்டில் த.வெ.க ஆட்சிக்கு வரும்போது ஒரு சந்தோஷம் இருந்தது. நாம் திராவிடக் கட்சிகளிடம் இருந்து விடுபட்டு மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை நோக்கித் தமிழகம் பயணிக்கும் என நினைத்தோம். ஆனால், பழைய தவறுகளும் அதே சிக்கல்களுமே மீண்டும் மீண்டும் தலைதூக்குகின்றன.
காணாமல் போகும் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்படும் கொடூரம் தொடர்கிறது. மாநிலத்தில் போதைப்பொருள் கலாச்சாரம் இன்னும் அதிகரித்து வருகிறது. அதிலும் த.வெ.க-வில் இருக்கும் நபர்கள்தான் முன்னொடியாக இருக்கிறார்கள். சிறு துறைமுகங்கள் அமைச்சர்கள் எல்லா பிரச்னைகளுக்கும் வாய் திறப்பார். அவருடைய துறையான சிறு துறைமுகத்தில் இருந்து போதைப் பொருள் கடத்தப்பட்டிருக்கிறது. அதில் அவர் ஒரு சிறிய விளக்கம்கூட கொடுப்பதில்லை.
அதே மாதிரி, சிறையிலிருந்தே கைதிகள் தப்பிச் செல்லும் அளவுக்குச் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. இதனால் பெண்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் வீதிகளில் பயத்துடன்தான் நடக்க வேண்டிய இன்றைக்கு இருக்கும் நிலைமை இருக்கிறது.
ஒரு தலைவருக்குத் தொலைநோக்குப் பார்வையும் லட்சியமும் இருக்க வேண்டும். நாட்டையும் மாநிலத்தையும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதோடு, ஒவ்வொரு தனிமனிதனின் வளர்ச்சியை உறுதிப்படுத்துவதே லட்சிய ஜனநாயக கட்சியின் முதன்மைக் கொள்கை.” என்று ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பேசினார்.
தமிழ்நாட்டில் சிறு துறைமுகங்கள் துறைக்கு அமைச்சராக ஆதவ் அர்ஜுனா உள்ளார். இதனால், சிறு துறைமுகம் வழியாக போதைப்பொருள் கடத்தப்படும் நிலையில், அந்தத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வாய் திறக்காதது ஏன் என்று ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கேள்வி ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் லட்சிய ஜனநாயக கட்சியில் மாநில பொதுச் செயலாளர் நெல்லை ஜீவா, மனித உரிமைகள் அணி மாநிலச் செயலாளர் டாக்டர் ஆர்.ராஜ்குமார், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
