சிறையில் இருந்து கைதிகள் தப்பினால் இனி துப்பாக்கிச்சூடு : டிஜிபி ரத்தோர் அதிரடி உத்தரவு – dgp rathore issues stern order prisoners attempting to escape from jail will be shot

சிறையில் இருந்து கைதிகள் தப்பினால் துப்பாக்கிச்சூடு நடத்தி பிடிக்க டிஜிபி ரத்தோர் அதிரடி ஆணையிட்டுள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சமீபத்தில் புழல் மற்றும் தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோடினர்.இவர்களில் 13 பேர் கைதுசெய்யப்பட்ட நிலையில், 4பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த நிலையில், சிறைத்துறை நிர்வாகம் அதிரடியான புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது

துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு

சிறைகளில் உள்ள உயர் கோபுரங்களில் (Watch Towers) இனி துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று டிஜிபி ரத்தோர் தெரிவித்துள்ளார்.அதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள உயர் கோபுரங்களில் தோராயமாக 125 சிறைகளில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்றும், அந்தப் பாதுகாப்புக் பலப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தப்பியோடும் கைதிகள் மீது சுட உத்தரவு

சிறைகளில் இருந்து கைதிகள் தப்பியோட முயன்றால் அல்லது அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், அவர்களைச் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இது ஒரு முக்கியமான நடவடிக்கையாகக் பார்க்கப்படுகிறது. கைதிகள் தப்பியோடும் பட்சத்தில் சுட உத்தரவானது பிறப்பிக்கப்பட்டிருப்பது சிறைத்துறை வரலாற்றில் ஒரு கடுமையான எச்சரிக்கையாகும். சிறைகளில் தற்போது ‘செக்யூரிட்டி ஆடிட்’ (Security Audit) எனப்படும் பாதுகாப்புத் தணிக்கை முடிந்தவுடன், தீவிரமான வழிமுறைகள் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link