ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது முதன்மை லேப்டாப் ‘மேக்புக் ப்ரோ (2026)’ அறிமுகப்படுத்தியது. இந்த புதிய மேக்புக் ப்ரோ (2026), 12-கோர் சிபியு (CPU) கொண்ட M6 சிப்செட் மூலம் இயங்குகிறது. இது 2nm தொழில்நுட்ப முறையில் உருவாக்கப்பட்ட, அந்நிறுவனத்தின் முதல் சிப்செட் ஆகும்.
இந்த புதிய M6 கட்டமைப்பு, 14-இன்ச் மாடலில் மட்டுமே கிடைக்கிறது. மேலும், இந்த மேக்புக் ப்ரோ (2026) மாடலில் OLED டிஸ்ப்ளே இடம்பெற்றுள்ளது; ஆப்பிள் லேப்டாப் வரிசையில் இதுவே முதல் முறையாகும்.
14-இன்ச் மேக்புக் ப்ரோ மாடலுக்கு, விருப்ப தேர்வாக ‘நானோ-டெக்ஸ்சர்’ (nano-texture) டிஸ்ப்ளே மேம்பாட்டையும் நிறுவனம் வழங்குகிறது. இதில் ‘சென்டர் ஸ்டேஜ்’ வசதியுடன் கூடிய 12MP வெப் கேமராவும் உள்ளது.
கனெக்டிவிட்டி மற்றும் பேட்டிரி:
இதில் மூன்று Thunderbolt 4 போர்ட்கள், ஒரு MagSafe 3 போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக், ஒரு HDMI போர்ட் மற்றும் SDXC கார்டு ஸ்லாட் ஆகியவை உள்ளன. மேலும், இதில் ஆப்பிளின் பேக்லிட் (backlit) வசதி கொண்ட மேஜிக் கீபோர்டு இடம்பெற்றுள்ளது.
M6 சிப் பொருத்தப்பட்ட மேக்புக் ப்ரோ (2026) மாடலானது, ஒருமுறை சார்ஜ் செய்தால் 24 மணிநேரம் வரை வீடியோ ஸ்ட்ரீமிங் அல்லது 16 மணிநேரம் வரை வயர்லெஸ் இணைய பயன்பாட்டை வழங்கும் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவிக்கிறது. இந்த லேப்டாப்-இல் 72.4Wh பேட்டரி உள்ளது மற்றும் இது 96W வரையிலான வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை ஆதரிக்கிறது.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
இந்தியாவில், 14-இன்ச் டிஸ்ப்ளே மற்றும் M6 பிராசஸர் கொண்ட மேக்புக் ப்ரோ (2026) மாடலின் விலை ரூ. 2,39,900 முதல் தொடங்குகிறது. இதன் பேஸ் மாடலில் 16GB ஒருங்கிணைந்த மெமரி (unified memory) மற்றும் 1TB ஸ்டோரேஜ் உள்ளது. பயனர்கள் கூடுதலாக ரூ. 24,000 செலுத்தி 24GB மெமரி, அல்லது ரூ. 48,000 செலுத்தி 32GB மெமரி வரை மேம்படுத்திக்கொள்ளலாம்.
மேலும், மேக்புக் ப்ரோ (2026) வாங்குபவர்கள், கூடுதல் கட்டணமாக முறையே ரூ. 60,000 மற்றும் ரூ. 1,80,000 செலுத்தி, 2TB அல்லது 4TB ஸ்டோரேஜ் வசதியை பெற்றுக்கொள்ளலாம். ‘நானோ-டெக்ஸ்சர்’ டிஸ்ப்ளே மேம்பாட்டிற்கு கூடுதலாக ரூ. 18,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது..
புதிய மேக்புக் ப்ரோ (2026) மாடலை வாங்க தற்போது முன்பதிவு செய்யலாம். இது நவம்பர் 6-ஆம் தேதி முதல் ஆப்பிள் இந்தியா ஆன்லைன் ஸ்டோர் வழியாக விற்பனைக்கு வரும். இந்த லேப்டாப் ஸ்பேஸ் பிளாக் மற்றும் சில்வர் ஆகிய வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.
