சிறையில் வழங்கும் சப்பாத்தியை சாப்பிட முடியவில்லை: மாஜி அமைச்சர் மகேஷ் தரப்பு வக்கீல் வாதம்

– நமது சிறப்பு நிருபர் –

தனியார் பள்ளிகளிடம் ரூ.400 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் சென்னை புழல் சிறையில் திமுக முன்னாள் அமைச்சர் மகேஷ் அடைக்கப்பட்டுள்ளார். 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிப்பதற்கு அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பான விசாரணைக்காக, இன்று (அக்டோபர் 30) மகேஷ் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது மகேஷ் தரப்பில் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வாதம்:

* கடந்த மாதம் 18ம் தேதி போலீசார் விசாரணை நடத்தினர். அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு தரப்பட்டது. அன்று மட்டும் 8 மணி நேரம் விசாரித்துள்ளனர்.

* நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் புழல் சிறையில் முறையான உணவு தரப்படவில்லை.

* மற்ற கைதிகளுக்கு வழங்கப்படும் சப்பாத்தி மட்டுமே சிறையில் உணவாக வழங்கப்படுகிறது.

* சிறையில் வழங்கப்படும் சப்பாத்தியை சாப்பிட முடியவில்லை.

* முறையான உணவு வழங்கப்படாததால் உடல் எடை 4 கிலோ குறைந்து விட்டது.

* வீட்டு உணவு வழங்கக்கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய இருக்கிறோம்.

இவ்வாறு மகேஷ் தரப்பு வக்கீல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, நீதிமன்றத்தில் வாதம் தொடர்ந்து நடக்கிறது.

Source link