சில வரி செய்தி:தஞ்சாவூர்

தஞ்சாவூர்: புதுக்கோட்டை மாவட்டம், மஞ்சப்பேட்டையை சேர்ந்த விஜய், 22, சுதர்சன், 19, ஆகிய இருவரும், தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் நடந்த கபடி போட்டியில் பங்கேற்று விட்டு நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு பைக்கில் சென்ற போது, அற்புதாபுரம் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது பைக் மோதியதில் பலியாகினர்.

ராமநாதபுரம்: எட்டியதிடல் ஜெஸ்வின்ராஜ், 20, சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ராபர்ட், 20, ஆகிய இருவரும் திருச்சியில் இருந்து நேற்று முன்தினம் டூ – வீலரில் ஆர்.எஸ்.மங்கலம் நோக்கி பயணித்தனர். சின்னக்கீரமங்கலம் பகுதியில், தனியார் சுற்றுலா பஸ் மீது பைக் மோதியதில், இருவரும் இறந்தனர்.

கிருஷ்ணகிரி: ஓசூர் ஜூஜூவாடி சோதனைச்சாவடியில், சிப்காட் போலீசார், நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். கர்நாடகா மாநிலம், பெங்களூருவிலிருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் ஆம்னி பஸ்சில், கேரள மாநிலம், இடுக்கியை சேர்ந்த அனிருத், 21, என்பவர், 13 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா ஆயிலை கடத்தியதால் கைது செய்யப்பட்டார்.

தேனி: சில்லமரத்துப்பட்டி பஸ் ஸ்டாப்பில் நேற்று காலை, 10:00 மணிக்கு காத்திருந்த பயணியர் மீது, உத்தமபாளையம் நோக்கி சென்ற அரசு பஸ் மோதியது. இதில், அதே பகுதியை சேர்ந்த சுமதி, 46, அவரது மகன் விஜய் பிரவீன், 24, ஆகிய இருவர் பலியாகினர். மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.

நீலகிரி: குன்னுாரை சேர்ந்தவர் அலாவுதீன், 52. ரயில்வே பொதுப்பணி துறை ஒப்பந்த ஊழியரான இவர், நேற்று காலை, 8:30 மணியளவில் ரயில்வே குடியிருப்பு பகுதிக்கு பணிக்கு சென்றபோது, காட்டெருமை தாக்கியதில் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கன்னியாகுமரி: நித்திரவிளையைச் சேர்ந்த பெனிடிக்ட்ராஜ், 56, மனைவி சீமா, 45, ஆகிய இருவரும் நேற்று காலை டூ – வீலரில் சென்றபோது, கல்லுவிளை அருகே எதிரே வந்த அரசு பஸ், இவர்கள் டூ – வீலர் மீது மோதியது. இதில், தடுமாறி கீழே விழுந்த சீமா மீது அரசு பஸ்சின் பின் சக்கரம் ஏறியதால், அவர் பலியானார்.

Source link