சென்னை: சிவகங்கை, தூத்துக்குடி எஸ்பிக்கள் உள்பட 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்து நிர்வாக காரணங்களுக்காக ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், இன்றும் 3 எஸ்பிக்கள் உள்பட 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில்; திருச்சி ஆயுதப்படை டிஐஜியாக இருந்த விஜயலட்சுமி, சென்னை ஊர்க்காவல் படை துறையின் டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட எஸ்பி சிவ பிரசாத், தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாகவும், சென்னை மத்திய மண்டலம் சிபிசிஐடி எஸ்பியாக இருந்த சண்முகப்பிரியா, மேற்கு மண்டல லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பியாகவும், தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக இருந்த அபிஷேக் குப்தா, சிவகங்கை மாவட்ட எஸ்பியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல, ராமேஸ்வரம் ஏஎஸ்பியாக இருந்த மீரா, சென்னை டிஜிபி அலுவலகத்தின் அலுவலக ஆட்டோமேஷன் மற்றும் கணினிமயமாக்கல் துறையின் ஏஎஸ்பியாக இடமாற்றப்பட்டுள்ளார், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
