சென்னை சூப்பர் கிங்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. முதலில் விளையாடிய ஐதராபாத் 194 ரன்கள் சேர்த்தது. பின்னர் 195 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சி.எஸ்.கே. களம் இறங்கியது.
ஒரு கட்டத்தில் பவர்பிளேயில் 3 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் குவித்திருந்தது. அதன்பின் சி.எஸ்.கே.-வால் ரன்கள் அடிக்க முடியவில்லை. இதனால் 184 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.
சி.எஸ்.கே.வை வீழ்த்தியன் மூலம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 6 போட்டிகளில் தலா 3 வெற்றி, 3 தோல்விகள் பெற்றுள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. ஆர்.சி.பி. 2-வது இடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் 3-வது இடத்திலும் உள்ளன.
சென்னை சூப்பர் கிங்ஸ் 6 போட்டிகளில் 2-ல் மட்டுமே வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது. எல்எஸ்ஜி 5 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்று 8-வது இடத்தில் உள்ளது.
