சென்னை: சென்னை கால்பந்து சங்கம் சார்பில் சீனியர் டிவிஷன் போட்டிகள் செனாய் நகரில் உள்ள பாவேந்தர் பாரதிதாசன் கால்பந்து மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ஏஜிஓ – இந்தியன் வங்கி அணிகள் மோதின. இதில் ஏஜிஓ அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில் ரக் ஷித் (26-வது நிமிடம்), ஷமீர் (46-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
