சீன ஓபன் பாட்மின்டன்: சிந்து ஏமாற்றம்

சாங்ஜோ: சீன பாட்மின்டன் 2வது சுற்றில் இந்தியாவின் சிந்து, லக்சயா சென், ஆயுஷ் ஷெட்டி தோல்வியடைந்தனர்.

சீனாவில், ‘சூப்பர் 1000’ அந்தஸ்து பெற்ற சீன ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சிந்து, உலகின் ‘நம்பர்-4’ சீனாவின் சென் யுபெய் மோதினர். முதல் செட்டை 21-16 எனக் கைப்பற்றிய சிந்து, இரண்டாவது செட்டை 20-22 என போராடி இழந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் மீண்டும் ஏமாற்றிய சிந்து 18-21 என கோட்டை விட்டார்.

ஒரு மணி நேரம், 29 நிமிடம் நீடித்த போட்டியில் சிந்து 21-16, 20-22, 18-21 என தோல்வியடைந்தார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, அயர்லாந்தின் நாட் குயென் மோதினர். இதில் ஆயுஷ் ஷெட்டி 21-15, 13-20, 20-22 என போராடி தோல்வியடைந்தார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் லக்சயா சென், கனடாவின் விக்டர் லாய் மோதினர். இதில் லக்சயா சென் 19-21, 11-21 என தோல்வியடைந்தார்.

Source link