“சுயநலத்திற்காக தமிழ்நாட்டின் உரிமைகளை காவு கொடுக்க துணிந்தவர் தான் இபிஎஸ்..” ஸ்டாலின் கடும் தாக்கு..! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

திருப்பூர் மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.. அப்போது திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக முதல்வர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.. அப்போது பேசிய அவர் ” தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக நாமக்கல்லில் பற்ற வைத்த தீ நாடு முழுவதும் பரவியது.. அந்த வெப்பம் நேற்று நாடாளுமன்றத்தில் அந்த சதித்திட்டத்தை எரித்து சாம்பலாக்கியது.. ஆனால் ஒன்றிய அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு சிறப்பாக செய்யும் என்று அதிமுக கூறியது.. சொந்த மாநில மக்களுக்கு எதிராக நடந்து கொள்ளும் கட்சி அதிமுக.. உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்பவர் தான் பழனிசாமி..

அடிமைகளிடம் தமிழ்நாடு மீண்டும் சிக்கலாமா? சிக்கினால் தமிழ்நாடு தமிழ்நாடாக இருக்குமா? அடிமை அதிமுக மற்றும் மதவாத பாஜக ஆகியவற்றிடம் இருந்து தமிழ்நாட்டை காக்க வேண்டும்..

மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் திமுக தான் ஒரிஜினல்.. திராவிட மாடல் ஆட்சியில் எண்ணற்ற சாதனைகளை தமிழ்நாடு படைத்துள்ளது.. இந்த சாதனைகளை பழனிசாமியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.. சொல்வதற்கு சாதனைகளும், பேசுவதற்கு கொள்கைகளும் பேசுவதற்கு கொள்கைகளும் இல்லாத பழனிசாமி, அவதூறு பரப்பி வருகிறார்.. அவதூறாக பேசுவது, சாபம் விடுவதை தனது பிரச்சாரமாக வைத்திருக்கிறார்.. சுயநலத்திற்காக தமிழ்நாட்டின் உரிமைகளை காவு கொடுக்க துணிந்த பழனிசாமிக்கு தமிழ்நாடு 11-வது தோல்வியை கொடுக்க வேண்டும்..

டபுள் என்ஜின், டப்பா என்ஜின் என்று வருவது எல்லாம், உரிமைத் தொகை நிறுத்துவதற்காக தான்.. விடியல் பயணத்திட்டத்தை முடக்குவதற்காக.. புதுமை பெண் திட்டங்களை நிறுத்துவதற்காக தான்.. 2023-ல் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது.. 31 மாதங்கள் கிடப்பில் போட்ட மசோதாவை சுயநலத்திற்காக பயன்படுத்தினர்.. எந்த நிபந்தனையும் இல்லாமல் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற தயாரா?

மகளிர் முன்னேற்றத்தில் பிரதமர் மோடிக்கு அக்கறை இல்லை.. அடிப்படை புரிதல் இல்லாமல் எடப்பாடி பழனிசாமி பேச வேண்டாம்.. இனமானத்தை அடகு வைத்தால் பொறுத்துக் கொள்ள மாட்டோம். தமிழ்நாட்டை காக்கும் போராட்டங்களை திமுக தொடர்ந்து செய்யும்..” என்று தெரிவித்தார்..

திருச்சி கிழக்கில் மீண்டும் பிரச்சாரம்.. பரபரப்பான தேர்தல் களத்தில் விஜய் அதிரடி முடிவு..!

Source link