கார்தூம்: சூடானின் தெற்கு டர்பூர் மாகாணத் தலைநகர் நியாலாவில் உள்ள மார்க்கெட் பகுதியில் அதிக மக்கள் நடமாட்டம் இருந்துள்ளது. அப்போது, திடீரென ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 110 பேர் படுகாயம் அடைந்தனர்.
26ம் தேதி மாலை நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் என்று ‘எமர்ஜென்சி லாயர்ஸ்’ எனும் வன்முறை கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு சூடான் ராணுவமே காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ள அக்குழு, தனி விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
வட ஆப்ரிக்காவில் அமைந்துள்ள சூடான் நாட்டில், 2021ம் ஆண்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. ராணுவத்துடன் தங்களை இணைக்க அதிவிரைவு ஆதரவு படையினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், 2023ல் இருந்து இரு தரப்பினரிடையே மோதல் நீடித்து வருகிறது.
