சூடுபிடிக்கிறது ஆட்சி கவிழ்ப்பு சதி வழக்கு; நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்

நமது நிருபர்

தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கில் முன்ஜாமின் உத்தரவை பெறுவதற்காக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜரானார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை த.வெ.க., – எம்.எல்.ஏ., இளையராஜாவிடம், குதிரை பேரம் நடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமின் வழங்கியது.

ஆனாலும், சோதனை, விசாரணை என்ற பெயரில், தங்களை துன்புறுத்தக் கூடாது என, தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

ஐகோர்ட் நீதிபதி, ‘குதிரை பேர வழக்கில், முன்ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் சரணடைந்து, முன் ஜாமின் பெறவில்லை ஏன்” என செந்தில்பாலாஜிக்கு கேள்வி எழுப்பி இருந்தார். இந்நிலையில் இன்று முன்ஜாமின் உத்தரவை பெறுவதற்காக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜரானார்.

தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

ஆட்சி கவிழ்ப்பு சதி வழக்கு; செந்தில்பாலாஜி ஆஜர்; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

Source link