சூர்யாவை காட்டிக் கொடுத்து திட்டு வாங்க வைத்த கார்த்தி: அண்ணன் என்ன செய்தார் தெரியுமா? – when sardar 2 star karthi exposed suriya’s secret to dad sivakumar

தன் அண்ணன் சூர்யாவை போட்டுக் கொடுத்து சந்தோஷப்பட்டதை சர்தார் 2 விளம்பர நிகழ்ச்சியில் தெரிவித்திருக்கிறார் கார்த்தி. அதை கேட்ட ரசிகர்களோ, அண்ணனை மாட்டிவிட்டதில் என்னவொரு சந்தோஷம் என்கிறார்கள்.

சர்தார் 2 படம் தொடர்பாக ஹைதராபாத்தில் பேசிய கார்த்தி, தான் சூர்யாவை அப்பாவிடம் வசமாக மாட்டிக் கொடுத்த சம்பவம் குறித்து விவரித்திருக்கிறார்.

ஹைதராபாத்தில் கார்த்தி

சிவகுமாரின் மகன்கள் சூர்யாவும், கார்த்தியும் வெவ்வேறு குணம் கொண்டவர்கள். சூர்யா, பேசவே மாட்டார். கார்த்தியோ பேசினால் பேசிக் கொண்டே இருப்பார். ஆனால் கார்த்தி பேசினால் சுவாரஸ்யமாகத் தான் இருக்கும். இந்நிலையில் தான் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடித்திருக்கும் சர்தார் 2 படத்தை விளம்பரம் செய்ய ஹைதராபாத் சென்றார் கார்த்தி. அங்கு தெலுங்கில் பேட்டி அளித்தபோது சூர்யாவை மாட்டிவிட்டு சந்தோஷப்பட்டதை கூறியிருக்கிறார்.

கார்த்தி சுவாரஸ்யம்

கார்த்தி கூறியதாவது, நான் 12ம் வகுப்பு படித்தபோது பொதுத்தேர்வுகளுக்காக படித்தேன். படிக்கிறேனோ இல்லையோ எப்பொழுதும் கையில் புத்தகத்துடன் இருப்பேன். அதனால் இவன் தான் நல்லா படிக்கிறான் என பெற்றோர் நினைத்தார்கள். என் அண்ணன் அப்பொழுது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். தினமும் இரவு படம் பார்க்க தியேட்டருக்கு செல்வார். பகலில் நீ எங்கு வேண்டுமானாலும் போ. ஆனால் இரவானால் வீட்டிற்கு வந்துவிட வேண்டும் என்பதே எங்கள் அப்பாவின் ரூல்ஸ். இரவு 12 மணிக்குள் வராவிட்டால் நான் கேட்டை பூட்டிவிடுவேன் என்பார் அப்பா. அதனால் இரவு 12 மணிக்கு முன்பே வீட்டிற்குள் வந்துவிடணும் என்றார்.

கார்த்தி ஹேப்பி

படிப்பதால் இரவு 12 மணிக்கு நான் விழித்துக் கொண்டிருப்பேன். நைசா கேட் திறக்கும் சத்தம் கேட்டதுமே, அப்பா அண்ணா இப்போ தான் வர்றான் என போட்டுக் கொடுத்துவிடுவேன். உடனே பால்கனியில் இருந்து கத்துவார் அப்பா. எனக்கு அதை கேட்டு ஒரே சந்தோஷமாகிவிடும். நான் தான் போட்டுக் கொடுக்கிறேன் என்பது அண்ணனுக்கு முதலில் தெரியாது. தனக்காக அப்பா காத்திருந்து கேட் திறக்கும் சத்தம் கேட்டதும் திட்டுகிறார் என முதலில் நினைத்தார். அதன் பிறகே தூங்கும் அப்பாவை எழுப்பி திட்ட வைத்ததே நான் தான் என்பது அண்ணனுக்கு தெரியும் என்றார் கார்த்தி.

கார்த்தி சாபம்

சூர்யா பார்க்கத் தான் சமத்து. ஆனால் சிறு வயதில் தம்பி கார்த்தியை படாதபாடு படுத்தியிருக்கிறார். கார்த்திக்கு பேய் என்றால் பயம். அதனால் சிறுவனாக இருந்தபோது முகத்தில் பவுடரை அதிகமாக பூசிக் கொண்டு தூங்கும் கார்த்தி அருகில் சென்று பயம் காட்டியிருக்கிறார் சூர்யா. தூங்கிக் கொண்டிருந்த கார்த்தி கண் விழித்து சூர்யாவின் பவுடர் முகத்தை பார்த்து பேய் என கத்தி அழுதிருக்கிறார். அவர் இப்படி பவுடர் பேயாக மாறி பலமுறை பயமுறுத்தியிருக்கிறார். அதற்கு எல்லாம் சேர்த்து வைத்து தான் அப்பாவிடம் வசை வாங்கி கொடுத்திருக்கிறார் போன்று கார்த்தி. 12ம் வகுப்பில் தான் படித்து வாங்கிய மார்க்கிற்கு பரிசாக கிடைத்த பைக்கை அண்ணன் மட்டுமே ஓட்டியதை பார்த்து அவருக்கு சாபம் எல்லாம் விட்டிருக்கிறார் கார்த்தி.

சூப்பர் ஸ்டார் ரஜினி
இரண்டாம் பாகம் ஏன்?

Source link