இந்த மனு மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில் அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் “பொத்தாம் பொதுவாக குற்றச்சாட்டுகளை கூறும் மனுவாக இது இருப்பதினால் , இதற்கு பதில் மனு தாக்கல் செய்ய தங்களுக்கு கால அவகாசம் தேவை ” என்று வாதிட்டுள்ளார்.
அப்போது செந்தில் பாலாஜி வழக்கறிஞர், “முன் ஜாமின் பெற்றுள்ள செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமாரை வேறு வழக்கில் கைது செய்து துன்புறுத்தக் கூடாது. மற்றபடி அவர் மின்சாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பார்” என்று கூறினார்.
அதற்கு பதில் அளித்த உயர் நீதிமன்ற நீதிபதி “மனுதாரர்களுக்கு ஏற்கனவே முன் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் இதுவரை அவர்கள் சரணடையவில்லை. நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னும் கூட முன்ஜாமின் பெற நேரில் வராமல் உள்ளார். இவர் சரணடையாத நிலையில், எவ்வாறு காவல்துறையினர் துன்புறுத்தக் கூடாது என்று கோர முடியும் ? மற்ற வழக்குகளிலும் முன்கூட்டியே மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், மனுதாரர் தற்போது எந்த உத்தரவையும் கோர முடியாது! என்று கூறிய நீதிபதி, அவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
