சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக சென்னையில் விடிய விடிய மழை கொட்டி தீர்த்திருக்கிறது. பல இடங்களில் மழை 10 செ.மீக்கும் அதிகமாக பதிவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
அதிகபட்சமாக மீனம்பாக்கம், சைதாப்பேட்டையில் 12 செ.மீ அளவுக்கு மழை பதிவாகியிருக்கிறது. நுங்கம்பாக்கத்தில் 10.7 செ.மீ அளவுக்கும், அடையாறு பகுதியில் 10 செ.மீ, தரமணி 9.5 செ.மீ என மழை பதிவாகியிருக்கிறது. இது தவிர, பாம்பனில் 5.5 செ.மீ, கோவையில் 3.9 செ.மீ அளவுக்கு மழை பதிவாகியிருக்கிறது.
கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
