சென்னை இளைஞர் வெட்டிக்கொலை: "தவெக ஆட்சி இருக்கும்வரை தமிழ்நாட்டுக்கு விடிவே இல்லை"- ஸ்டாலின் கண்டனம்

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் மைத்ரேயன். இன்று காலை அடையாறு இந்திரா நகர் வாட்டர் டேங்க் அருகே மைத்ரேயனை வழிமறித்த கும்பல் ஒன்று ஆயுதங்களால் தாக்கி இருக்கிறது.

மைத்ரேயனைக் கொலை செய்துவிட்டு 3 பேர் தப்பிச் செல்லும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

crime
crime

தகவலறிந்து வந்த அடையாறு போலீசார், மைத்ரேயனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.

கொலை செய்த 3 பேரையும் கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தச் சம்பவத்திற்கு எதிராக திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “சிறை, பள்ளி, சாலை, நீதிமன்றம் என எங்கும் பாதுகாப்பில்லை!

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

இதைப் பற்றி எல்லாம் முதலமைச்சருக்கு அக்கறை இல்லை. அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் இல்லை. குற்றவாளிகளுக்குப் பயமில்லை.

த.வெ.க. ஆட்சி இருக்கும் வரை தமிழ்நாட்டுக்கு விடிவே இல்லை” என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb



Source link