சென்னை ஐ.ஐ.டி.,யில் பயொடெக்னாலஜி மாணவர்களுக்கு புதிய தொழில் பயிற்சி

சென்னை ஐ.ஐ.டி., சார்பில், ‘பயோடெக்னாலஜி’ மற்றும் ‘பயோமேனுபேக்டரிங்’ எனும் உயிரி உற்பத்தி துறைகளில் மாணவர்களுக்கு செய்முறை பயிற்சி அளிக்கும் வகையில் ‘உத்யோக்’ என்ற புதிய திறன் மேம்பாட்டு பயிற்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தொழில் துறைக்கு தேவையான பயிற்சியை மாணவர்களுக்கு அளிக்கும் நோக்கில் இந்த பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்சி மூன்று கட்டங்களாக நடக்கிறது. முதல் கட்டமாக ஐ.ஐ.டி., அவுட்ரீச் மையம் வாயிலாக 3 மாதங்களுக்கு ‘ஆன்லைன்’ வகுப்புகள் நடத்தப்படும். இதில் தொழில் துறை நிபுணர்களின் விரிவுரைகள் மற்றும் செயல்முறை வீடியோக்கள் இடம்பெறும்.

இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு, இரண்டாம் கட்டமாக சென்னை ஐ.ஐ.டி., கல்லூரியில் 4 வாரங்கள் நேரடி ஆய்வக செய்முறை பயிற்சி அளிக்கப்படும். இறுதியாக, தொழில் துறை நிறுவனங்களில் ‘இன்டர்ன்ஷிப்’ செல்வதற்கான நேர்காணல் வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும் என ஐ.ஐ.டி., நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பத்தில் ஏ.ஐ., எவ்வளவு முக்கியமோ, அதேபோல ‘அகாடமியா – இண்டஸ்ட்ரி’ எனப்படும் கல்வி மற்றும் தொழில் துறையின் இணைப்பும் அவசியமாகிறது. இந்த இடைவெளியை குறைப்பதற்கான ஐ.ஐ.டி.,யின் முக்கிய முயற்சியே ‘உத்யோக்’ பயிற்சி ஆகும்
– காமகோடி,
இயக்குனர், சென்னை ஐ.ஐ.டி.,

யாரெல்லாம் சேரலாம்?

பயோடெக்னாலஜி மற்றும் அது சார்ந்த படிப்புகளில் பி.டெக்., எம்.டெக்., மற்றும் எம்.எஸ்சி., பயிலும் இறுதியாண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள்.
முதல் பேட்ச் துவக்கம்: ஜன., 18, 2027
முன்பதிவு இறுதி தேதி: டிச., 15, 2026

Source link