சென்னை | கணவருடன் நடந்து சென்று கொண்டிருந்த இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டல்: போக்குவரத்து காவல் ஆய்வாளர் கைது

சென்னை: கணவருடன் நடந்து சென்று கொண்​டிருந்த இளம் பெண்​ணிடம் பாலியல் சீண்​டலில் ஈடு​பட்​ட​தாக போக்​கு​வரத்து காவல் ஆய்​வாளர் கைது செய்​யப்​பட்​டுள்​ளார்.

சென்னை வேளச்​சேரி பகு​தி​யைச் சேர்ந்த 26 வயது இளம் பெண் ஒரு​வர், கடந்த 26-ம் தேதி இரவு தனது கணவருடன் அதே பகு​தி​யில் உள்ள ஓரண்​டி​யம்​மன் கோயில் தெரு வழி​யாக நடந்து சென்று கொண்​டிருந்​தார்.

அப்​போது அந்த வழி​யாக பைக்​கில் வந்த 2 பேரில், பின்​னால் அமர்ந்​திருந்த ஒரு​வர் திடீரென இளம் பெண்​ணின் பின்​புறத்​தில் தட்டி பாலியல் சீண்​டலில் ஈடு​பட்​டார்.

அதிர்ச்​சி​யடைந்த அந்த பெண் கூச்​சலிட்​டார். உடனே அவரது கணவர் மற்​றும் அப்​பகு​தி​யில் இருந்த பொது​மக்​கள், பைக்கை மறித்து சம்​பந்​தப்​பட்ட நபரிடம் வாக்​கு​வாதம் செய்​தனர். அப்​போது அந்த நபர், தன்னை போலீஸ் எனக் கூறி மிரட்​டி​விட்டு அங்​கிருந்து பைக்​கில் தப்​பிச் சென்​றார்.

பாதிக்​கப்​பட்ட பெண் இதுகுறித்து வேளச்​சேரி காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். போலீ​ஸார் சம்பவ இடங்​களில் உள்ள கண்​காணிப்பு கேமரா பதிவு​கள் மற்​றும் புகார்​தா​ரர் தெரி​வித்த பைக் எண் அடிப்​படை​யில் விசா​ரணை நடத்​தினர்.

இதில் பாலியல் சீண்​டலில் ஈடு​பட்​டது ராணிப்​பேட்டை மாவட்​டத்​தில் போக்​கு​வரத்து காவல் ஆய்​வாள​ராகப் பணி​யாற்றி வரும் மணி​மாறன் என்​பது தெரிய​வந்​தது.

அவர் குடும்​பத்​துடன் சென்னை வேளச்​சேரி பகு​தி​யில் வசித்து வரு​வ​தாக​வும், சம்​பவத்​தன்று தனது உறவினருடன் மது அருந்​தி​விட்டு பைக்​கில் வீட்​டுக்கு திரும்​பும் வழி​யில் இச்​செயலில் ஈடு​பட்​ட​தாக​வும் போலீ​ஸார் தெரி​வித்​தனர்.

இதையடுத்​து, வேளச்​சேரி போலீ​ஸார் மணி​மாறன் மீது வழக்​குப் பதிந்​து, கைது செய்து சைதாப்​பேட்டை நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தினர். வழக்கை விசா​ரித்த நீதிப​தி, மணி​மாறனை அடுத்த மாதம் 11-ம் தேதிவரை நீதி​மன்​றக் காவலில் வைக்க உத்​தர​விட்​டார்.

இதையடுத்து அவர் பலத்த போலீஸ் பாது​காப்​புடன் புழல் மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்​டார். முன்​ன​தாக சைதாப்​பேட்டை நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தப்​பட்​ட​போது, மணி​மாறனை சிலர் தாக்க முயன்​றனர்.

பாது​காப்​புப் பணி​யில் இருந்த போலீ​ஸார் உடனடி​யாக தலை​யிட்டு அவரை பாது​காப்​பாக நீதி​மன்ற வளாகத்​துக்​குள் அழைத்​துச் சென்​றனர். கைது செய்​யப்​பட்ட போக்​கு​வரத்து காவல் ஆய்​வாளர் மீது துறை ரீதி​யான நடவடிக்கை எடுக்​கப்பட உள்​ள​தாக​வும், சம்​பவம் தொடர்​பாக உயர் அதி​காரி​கள் தனி​யாக வி​சா​ரித்து வரு​வ​தாக​வும்​ காவல்​ துறை தரப்​பில்​ தெரிவிக்​கப்​பட்​டது.

Source link