சென்னை டூ டலாஸ்: வருடத்திற்கு 2000 கோடி டர்ன்ஓவர் – உம்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ் வளர்ந்தது எப்படி? – how vummidi bangaru jewellers grow from chennai to dallas with 2k crore turnover

சென்னையில் நேற்று உம்மிடி பங்காரு எத்திராஜி காலமானார். நாட்டின் பாரம்பரிய நகைக் கடை மற்றும் தங்கம் செய்யும் தொழில் கொண்ட குடும்பத்தில் பிறந்த இவர், சிறுவயது முதலே தன்னை இந்த தொழிலில் ஈடுபடுத்திக் கொண்டு, நாட்டின் பெருமைமிக்க செங்கோலையும் வடிவமைத்துள்ளார். இந்த பதிவில் வும்மிடி ஜிவல்லர்ஸ் குறித்து முழுமையாக தெரிந்துக்கொள்ளலாம்.

சென்னையைச் சேர்ந்த உம்மிடி எத்திராஜ் நேற்று காலமானார். நகைகள், வைரங்கள் வடிவமைப்பு எனத் தங்களுக்கெனத் தனித்துவம் மற்றும் உலக அளவில் பல கிளைகள் கொண்ட நிறுவனமாக வும்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ் உள்ளது. அடுத்த மாதம் 100-ஆவது பிறந்த நாளைக் கொண்டாட இருந்த இவர்தான், இந்திய நாட்டின் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் வைக்கப்பட்ட செங்கோலை வடிவமைத்தவர்.

1947-ஆம் ஆண்டு இந்தியா பிரிட்டிஷாரிடம் இருந்து சுதந்திரம் பெற்றது. அப்போது அதிகாரம் கைமாறியதைக் குறிப்பிடும் வகையில் தங்க முலாம் பூசப்பட்ட செங்கோல் ஒன்று அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் வழங்கப்பட்டது. அதனை வடிவமைத்தது இவரது குடும்பத்தைச் சேர்ந்த மூத்தவர்களான உம்மிடி பங்காரு மற்றும் சன்ஸ் ஆவர். இதில் முக்கியப் பங்கு வகித்தவர் வும்மிடி எத்திராஜ் ஆவர்.

சென்னையில் உள்ள முதல் கடை

1947-ல் பாரிஸ் கார்னரில் உள்ள ‘கார்னர் ஷாப்’ என்று குறிப்பிடப்படும் வும்மிடி பங்காரு செட்டி அண்ட் சன்ஸ் கடையில்தான் செங்கோல் வடிவமைக்கப்பட்டுத் தயாரிக்கப்பட்டது. பல ஆண்டுகளாக வும்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ் கடைகள் பல கிளைகளாகப் பிரிந்திருந்தாலும், 1900-களில் நிறுவப்பட்ட அதன் அசல் வளாகம், பாரிஸ் கார்னரில் வும்மிடி துவாரகநாத் ஜுவல்லர்ஸ் என்ற பெயரில் இன்றும் இயங்கி வருகிறது.

புதிய செங்கோல் வடிவமைப்பு

குறிப்பாக 2023-ல் இந்தியாவின் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் செங்கோல் நிறுவப்பட்ட பிறகு, வும்மிடி எத்திராஜின் பங்களிப்பு அவரது குடும்பத்தின் பாரம்பரிய கைவினைத்திறனை தேசிய அளவில் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. 125 ஆண்டுகள் பழமையான வும்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான வும்மிடி குடும்பத்தின் மூத்தவர், இந்தியாவின் பாரம்பரிய நகைக் கைவினைத்திறனை நாட்டின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையான தருணத்துடன் இணைக்கும் ஒரு மரபுச் சின்னத்தை விட்டுச் செல்கிறார்.

80 வருட அனுபவம்

1926-ஆம் ஆண்டு நவம்பர் 25-ஆம் தேதி பிறந்த வும்மிடி எத்திராஜ், தென்னிந்தியாவின் நகைத்தொழிலில் ஒரு முக்கிய நபராகத் திகழ்ந்தார். கடந்த 1900-ஆம் ஆண்டு சென்னையில் ‘உம்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ்’ நகைக்கடை தொடங்கப்பட்டது. இந்தியாவின் புகழ்பெற்ற நகைக்கடைகளில் ஒன்றாகத் திகழும் இந்தக் கடை 125 ஆண்டுகளாகச் சிறப்பாக இயங்கி வருகின்றது. உம்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் உம்மிடி எத்திராஜ். இவர், தனது 22 வயதிலேயே நகைகளைச் செய்யும் தொழிலாளியாக தனது வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கினார்.

தமிழ்நாடு முதல் அமெரிக்கா வரை

125 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட இந்த வும்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ் தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்திய அளவில் பல கிளைகளைக் கொண்டுள்ளது. மேலும் அமெரிக்காவிலும் கிளைகள் பரப்பித் தனது வேரை ஆழமாக ஊன்றியுள்ளது. இந்த நிறுவனத்தின் 2026 ஆண்டு வருமானம் மட்டும் 2000 ஆயிரம் கோடிகளுக்கு மேல் உள்ளது.

தேசிய அளவில் மரியாதை

வும்மிடி எத்திராஜ் அவர்களது மறைவை ஒட்டி பலர் இரங்கல் தெரிவித்தனர். இந்திய நாட்டின் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் என நாட்டின் முக்கியத் தலைவர்கள், தமிழகத் தலைவர்கள் எனப் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்தனர்.

Source link