சென்னை வாணுவம்பேட்டை புனித யூதா ததேயு திருத்தல பெருவிழா..!

செங்கல்பட்டு மறைமாவட்டத்தின் புகழ்பெற்ற ஒரே புனித யூதா ததேயு திருத்தலமான, சென்னை வாணுவம்பேட்டையில் அமைந்திருக்கும் திருத்தூதர் புனித யூதா ததேயு திருத்தலத்தின் 49-வது ஆண்டு அருள்விழா மற்றும் பங்கு குடும்பப் பெருவிழா கடந்த 22-ந்தேதி (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கூட்டுத் திருப்பலி, நற்கருணை பவனி ஆகிய நிகழ்வுகள் நேற்று (அக்டோபர் 23) சிறப்பாக நடந்தன .

ததேயுவின் தேர் பவனி இன்று (அக்டோபர் 24) மாலை நடைபெற்றது.

பங்கு குடும்பப் பெருவிழா, நன்றித்திருப்பலி & கொடியிறக்கம் நாளை (அக்டோபர் 25) நடைபெற உள்ளது.

திருப்பலியின் முடிவில் திருக்கொடியிறக்கப்பட்டு பக்தர்கள் மரியாதை செலுத்தும் வண்ணம் திருப்பீடத்தில் வைக்கப்படும். 

இப்பெருவிழா ஏற்பாடுகளை திருத்தல அதிபர் மற்றும் பங்குத் தந்தை அருள்முனைவர் இ. அந்தோணி ராஜ், உதவி அதிபர் அருள்தந்தை அலெக்ஸ் ஸ்டாலின் குமார், அருட்சகோதரிகள், அன்பிய பொறுப்பாளர்கள், நிதிக்குழு உறுப்பினர்கள், இளையோர் இயக்கம், பக்த சபையினர் மற்றும் பங்கு இறைமக்கள் சிறப்பாக செய்து வருகின்றனர். 

விழா நாட்களில் வருகை தரும் பக்தர்கள் அனைவருக்கும் தேவையான வசதிகளும் அருள் அடையாளங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Source link