வரும் திங்கள்கிழமை அன்று முதலமைச்சர் விஜய்யின் பதிலுரை தமிழக சட்டப்பேரவையில் நடைபெறவுள்ளது. அதில் அவர் என்ன பேசப் போகிறார், எதிர்க்கட்சிகள் கொந்தளிக்குமா, கடந்த முறையை போல வெளிநடப்பு செய்வார்களா போன்ற பல கேள்விகள் எழுகின்றன. குறிப்பாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுக்கும் வகையில் பேசியிருந்தார்.
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, உறுப்பினர்கள் கேட்கிற அனைத்து கேள்விகளுக்கும் தெளிவான பதிலை Monday அன்று நான் பேசுறேன். நான் இங்கு இல்லை என்றாலும், யார் யார் என்ன கேள்வி கேட்கிறார்கள் என்பது வந்துடும். எல்லாத்துக்கும் தெளிவான பதில் சொல்றேன். உங்க சார்பா அவங்க கிட்ட ஒரு Promise மட்டும் கேட்டுக்கிறேன். யாரும் எழுந்திருச்சு ஓடிடக் கூடாது என்று கடந்த வெள்ளி அன்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் பேசிவிட்டு சென்றார்.
முதல்வர் விஜய் என்ன பேசுவார்?
நாளைய தினம் (செப்டம்பர் 7, 2026 திங்கள்) காவல், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் விஜய் பதிலுரை வழங்குகிறார். இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆளுங்கட்சியை சீண்டும் வகையில் பேசியிருந்தார். அதற்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் என்ற அடிப்படையில் முதலமைச்சர் விஜய் அன்றைய தினமே சட்டப்பேரவையில் பேசியிருந்தார். இதனால் நாளை அப்படி என்ன பேசப் போகிறார்? சட்டப்பேரவையில் அனல் பறக்குமா? போன்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மாநாட்டில் சொன்னதை நிகழ்த்தி காட்டிய CM விஜய்
சட்டமன்றமா, சண்டை மன்றமா?
சட்டப்பேரவை நிகழ்வுகள் முழுவதுமாக நேரலை செய்யப்படுவதால் பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் தினசரி பார்த்து வருகின்றனர். குறிப்பாக தவெக, திமுக இடையில் நடைபெறும் கருத்து மோதல்கள், குற்றச்சாட்டுகள் பரபரப்பை கிளப்பி வருகின்றன. தேமுதிக எம்.எல்.ஏ பிரேமலதா விஜயகாந்த் கூறியது போல இதென்ன சட்டமன்றமா, இல்லை சண்டை மன்றமா எனக் கேட்கும் அளவிற்கு ஒவ்வொரு நாளும் பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுக்கின்றன.
திமுக வெளிநடப்பு செய்யுமா? அமளியில் ஈடுபடுமா?
கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் Party Fund, அப்பாவை காணோம் போன்ற விஷயங்களை முதலமைச்சர் விஜய் பேசியதால் கொந்தளித்த திமுக எம்.எல்.ஏக்கள் சட்டென வெளிநடப்பு செய்தனர். நாளைய தினமும் திமுகவை சீண்டும் வகையில் பேச வாய்ப்புள்ளது. அதற்கு திமுக என்ன எதிர்வினை ஆற்றப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒருவேளை முதலமைச்சரின் பேச்சை கேட்க முடியாமல் அல்லது எதிர்வினை ஆற்ற முடியாமல் வெளிநடப்பு செய்தால், தவெகவினர் மத்தியில் கடும் விமர்சனங்களுக்கு ஆளாகும். முதலமைச்சர் விஜய் பேச வேண்டும் எனக் கேட்கின்றனர். பேசினால் ஓடி விடுகின்றனர் என்ற விமர்சனத்திற்கு மீண்டும் ஆளாவர்களா என்பது கவனம் பெற்றுள்ளது.
இளைஞர்களை அரசியல் பக்கம் திருப்பிய முதல்வர் விஜய்
கடந்த காலங்களை போல் அல்லாமல் சட்டப்பேரவை நிகழ்வுகளை இளைஞர்கள் அதிகம் பார்த்து வருகின்றனர். இது அரசியலில் ஈடுபடுவதற்கு தூண்டுகோலாகவும் அமைந்துள்ளது. இதற்கு ஆளுங்கட்சி வரிசையில் தவெக அமர்ந்ததும், முதலமைச்சர் நாற்காலியை விஜய் அலங்கரித்ததும் முக்கிய காரணம். இளைஞர்கள் சரியான அரசியலை பேசுகிறார்களா என்பதை தாண்டி, அவர்களை அரசியல் பேச வைத்துள்ளது தவெக என்பதில் மாற்று கருத்தில்லை.
திமுகவை விமர்சிக்கும் முதல்வரின் உரை
குறிப்பாக திமுகவிற்கு தவெக தரப்பில் அளிக்கப்படும் பதிலடிகளை ரீல்ஸ்களாக சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். அந்த வகையில் வரும் திங்கள்கிழமை பேச்சானது திமுக கடந்த ஆட்சியில் என்னென்ன சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை வைத்திருந்தீர்கள் என்பதை லிஸ்ட் போடக்கூடும். ஆனால் ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் என்ன செய்தீர்கள் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியதற்கு சரியான பதில் வேண்டும் என்பதும் கவனிக்கத்தக்கது.
Source link
