தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வங்கக் கடலில் இன்று அர்னாப் புயல் உருவாகவுள்ளது. இன்று (26-10-26) புயலாக வலுப்பெறும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை (27-10-26) தீவிரப் புயலாக மாறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 28ஆம் தேதி ஆந்திராவின் பாபட்லா – விசாகபப்ட்டினம் இடையே அர்னாப் புயல் கரையை கடக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயல் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கடலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மீனவர்கள் யாரும் மறு உத்தரவு வரும் வரை கடலுக்குச் செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னையை அடுத்த செம்பரம்பாக்கம் ஏரியில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்று பிற்பகலில் ஆய்வு செய்யவுள்ளார். தொடர் கனமழையால் தமிழகம் ஸ்தம்பித்து வரும் நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியின் அளவு என்ன? வரும் காலங்களில் மழையால் ஏரியின் அளவு கூடுமா? என்பது குறித்து முதல்வர் விஜய் இன்று ஆய்வு செய்யவுள்ளார்.
