அப்பொழுது மைக்கை பிடித்த யூடியூப் சேனலைச் சேர்ந்த சிவா என்பவரை எம்.எல்.ஏ அடிக்க கை ஓங்கிய வீடியோ சமூக வலைதளங்களிலும் ஒரு சில செய்தி சேனலிலும் ஒளிபரப்பாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சிவாவை, எம்.எல்.ஏ மீது எந்த தவறும் இல்லை நான் தான் மைக்கை நீட்டினேன் அவர் விளையாட்டாக கை ஓங்கினார் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவை பதிவிடுமாறு கபிலின் ஆதரவாளர்கள் கூறியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவரும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை சிவா பதிவிட்டுள்ளார். மீண்டும் அவரை தொடர்பு கொண்ட கபில் மற்றும் அவருடைய சகோதரர் தனஞ்செழியன் சிவாவை யூடியூப் சேனலிலும் இந்த வீடியோவை பதிவிடுமாறு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. அவரை மிரட்டியதோடு அவருடைய அலுவலகத்திற்கு உடனடியாக வரும்படி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
பின்பு அந்த நபர் வைத்துள்ள ஸ்டுடியோ அலுவலகத்திற்கு வந்த கபில், அவருடைய சகோதரர் தனஞ்செழியன் மற்றும் அவர்களுடைய ஆதரவாளர்கள் அந்த நபரை சரமாரியாக புரட்டி எடுத்துள்ளனர். இதனை அங்கிருந்த செய்தியாளர்கள் அரங்கநாதன் மற்றும் கல்யாணசுந்தரம் வீடியோ எடுத்துள்ளனர். அதைக் கண்டு அவர்கள் வீடியோ எடுத்த செய்தியாளர்களையும் சரமாரியாக புரட்டி எடுத்து அவர்களுடைய கையில் இருந்த செல்போனை பிடுங்கி அதிலிருந்து வீடியோக்களை அழித்துள்ளனர். எம்.எல்.ஏ கபில் மற்றும் அவருடைய சகோதரர் தனஞ்செழியன் தாக்கியதில் காயமடைந்த செய்தியாளர்களை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பாதிக்கப்பட்ட செய்தியாளர்கள் அரங்கநாதன் மற்றும் கல்யாணசுந்தரம் தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த செய்தியாளர்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்கள் பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் சோளிங்கர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் சம்பவ இடத்துக்கு வந்த சோளிங்கர் போலீசார் பேச்சுவார்த்தை அடுத்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து சோளிங்கர் போலீசார் விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.
