சென்னை: சட்டசபை தேர்தலின் போது சொத்து விபரங்களை மறைத்ததாகக் கூறி, திமுக தலைவர் ஸ்டானுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஸ்டாலின், தனது வேட்புமனுவில், திமுக அறக்கட்டளை தலைவர் மற்றும் சொத்து விபரங்களை மறைத்ததாகவும், இது தொடர்பாக தேர்தல் ஆணைய விசாரணைக்கு ஆணையிடுமாறு திருஞானசம்பந்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும்போது, வேட்புமனுவில் அறக்கட்டளை குறித்த விபரங்களை சமர்பிக்க தேவையில்லை என்று ஸ்டாலின் தரப்பில் வாதிடப்பட்டது.
இதனைக் கேட்ட நீதிமன்றம், ஆவணங்களை மொழி பெயர்த்து தாக்கல் செய்ய மனுதாரருக்கு அனுமதியளித்து உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கு விசாரணை 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
