ஜனநாயகனின் பரிதாப நிலை.. கவலையா முதல்வர் விஜய்: ஆர்.பி. உதயகுமார் கடும் அட்டாக் – aiadmk rb udhayakumar comments on cm vijay jana nayagan movie

தவெக ஆட்சி அமைத்து இரண்டு மாதங்களுக்கு மேல் கடந்துள்ள நிலையில், முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியானது. தவெக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் இந்த படத்தினை திரையரங்குளில் பார்த்து ரசித்தனர். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் , ஜனநாயகன் படம் ஊத்திக்கிச்சு என்று பேசியுள்ளது பெரும் பரபரப்பினை கிளப்பி கொண்டிருக்கிறது.

அதிமுகவை சார்ந்த ஆர்.பி. உதயகுமார் தொடர்ச்சியாக தவெகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அதோடு முதல்வர் ஜோசப் விஜய் மீது அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்து கொண்டிருக்கிறார். இப்படியாக அவர் வெளியிடும் வீடியோக்கள் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்து வருகின்றன. அதோடு தவெகவினர் ஆர்.பி. உதயகுமார் செய்யும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் நான்கு நாட்களாக ஜனநாயகனின் பரிதாப நிலை கண்டு முதல்வர் கவலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார். அதாவது கடந்த 23 ஆம் தேதி ஜனநாயகன் ரிலீசான நிலையில், முதலமைச்சர் விஜய் ஜனநாயகனின் பரிதாப நிலை கண்டு, கவலையில் நான்கு நாட்களாக தலைமைச் செயலகத்தில் தலை காட்டவில்லை என கிண்டல் அடித்துள்ளார். அதோடு ஜனநாயகன் படம் ஊத்திக்கிச்சுன்னு கவலையா? எனவும் கேலியாக கேள்வி எழுப்பியுள்ளார் ஆர்.பி. உதயகுமார்.

அவருடைய இந்த பேச்சு தற்போது கவனம் பெற்று கொண்டிருக்கிறது. அதோடு அரிசி விலை உயர்வு தொடர்பாக தவெக அரசு மீது கடும் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். அதாவது, ஒரே மாதத்தில் தமிழ்நாட்டில் அரிசி விலை 20% உயர்ந்துள்ளதால் மக்கள் கலங்கி போய் இருக்கிறார்கள். ரேஷன் கடைகளில் வழங்கும் விலையில்லா அரிசி தரமில்லாத நிலையில் உள்ளது. மக்கள் பிரச்சனைக்கு ஓடி வருவேன் என்று கூறினார் முதல்வர் விஜய்.

தற்போது இந்த பிரச்சனைக்கு அவர் என்ன சொல்ல போகிறார் என்ற கேள்வியை ஆர்.பி. உதயகுமார் முன்வைத்துள்ளார். அதோடு அரிசி விலை குறையுமா அல்லது இன்னும் கூடுமா என்பது ஆண்டவனுக்கே வெளிச்சன். இதற்கு பட்ஜெட்டில் தீர்வு காணப்படுமா? எனவும் ஆர்.பி. உதயகுமார் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அதோடு ஜனநாயகன் ஊத்திக்கிச்சு என்றும் அவர் பேசியுள்ளது சோஷியல் மீடியாவில் கவனம் பெற்று கொண்டிருக்கிறது.

இதற்கிடையில் ஜனநாயகன் படம் ரிலீசான தினத்தன்று முதல்வர், அமைச்சர்கள் என அனைவரும் விடுமுறையில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தன. குறிப்பாக அன்றைய தினம் விசாரணை கைதியான அருணாச்சலம் என்ற இளைஞர் உயிரிழந்த நிலையில், இப்பிரச்சனை தொடர்பாக ஜனநாயகன் ரிலீஸில் பிசியாக முதல்வர் வாய் திறக்காமல் இருப்பதாக விமர்சனம் செய்தன.

அதோடு விடுமுறை முடிந்து பணிக்கு வந்த பிறகாவது முதல்வர் விஜய், லாக்கப் மரணம் குறித்து பேசுவாரா என்று பார்ப்போம் என திமுக எம்பி கனிமொழி கடும் கேள்வி எழுப்பினார். மேலும் பல இடங்களில் ஜனநாயகன் படத்துடைய முதல்நாள் டிக்கெட் விலை அரசு நிர்ணயித்த கட்டணத்தை விடவும், கூடுதலாக விற்கப்பட்டதும் விமர்சனங்களை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

Source link