சமீப நாட்களாகப் பல்வேறு மாற்றங்களைக் கண்டு வரும் ஆபரணத் தங்கத்தின் விலை, புதிய வாரத்தின் முதல் நாளான இன்று மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது. கடந்த வாரத்தில் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்த நிலையில், கடந்த வியாழக்கிழமையன்று சவரனுக்கு அதிரடியாக ரூ.2,160 வரை குறைந்து மக்களிடையே சற்று நிம்மதியை ஏற்படுத்தியது. இருப்பினும், அதற்கு அடுத்த நாளான 24-ம் தேதி மீண்டும் சரிவைச் சந்தித்து ஒரு கிராம் ரூ.13,230-க்கும், சவரன் ரூ.1,05,840-க்கும் விற்பனையானது.
தொடர்ந்து 25-ம் தேதி முதல் தங்கம் விலை மீண்டும் உயருமுகத்தைக் கண்டது. அன்றைய தினம் கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.13,300-க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,06,400-க்கும் விற்பனையானது. இந்த நிலையே நேற்றைய தினமான 26-ம் தேதியும் மாற்றமின்றி நீடித்தது.
இந்நிலையில், புதிய வாரத்தின் தொடக்க நாளான இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி, சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,06,960 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதேபோல் கிராமுக்கு ரூ.70 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.13,370-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தின் விலை உயர்ந்து வரும் அதே வேளையில், வெள்ளியின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி சீரான நிலை நீடிக்கிறது. சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கு விற்பனையாகிறது. அதேபோல் பார் வெள்ளி கிலோவுக்கு ரூ.2,40,000 என்ற விலையில் எவ்வித மாற்றமுமின்றி வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய தங்கம் விலை:
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,06,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.13,370-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை:
வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
