ஜனநாயகன் டாப் சீக்ரெட்: கேமியோ ரோலில் த.வெ.க அமைச்சர்; விஜய்க்காக உயிரை கொடுக்கும் இஸ்லாமிய இளைஞரா பார்க்கப் போறீங்க!

தமிழக முதல்வர் தளபதி விஜய் நடித்துள்ள கடைசி படமான ஜன நாயகன் திரைப்படம் வரும் ஜூலை 23-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து தளபதி விஜயின் நெருங்கிய நண்பரும், அமைச்சருமான ஸ்ரீநாத் மனம் திறந்து பேசியுள்ளார். 

இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பெசியங அவர், ‘ஜன நாயகன்’ திரைப்படம் வரும் 23-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், ஒட்டுமொத்த ரசிகர்களைப் போலவே நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.இப்படத்தில் ஒரு சிறிய ஆனால் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். படத்தில் என் பெயர் ‘இலியாஸ்’. கதையின் நாயகனான தலைவருக்காக (விஜய்) எனது உயிரையே தியாகம் செய்யும் ஒரு ஆழமான நண்பன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.

இந்த கேரக்டருக்காக நெற்றியில் தொழுகை வடு (கருப்பு புள்ளி) மற்றும் குல்லா அணிந்து, மிகவும் எதார்த்தமான தோற்றத்தில் நடித்துள்ளேன். திருக்குர்ஆன் ஓதுவது, தொழுகை (நமாஸ்) செய்வது போன்ற காட்சிகளில், ஒரு உண்மையான இஸ்லாமியர் எப்படி செய்வாரோ அதேபோல நேர்த்தியாகச் செய்ய முறையான பயிற்சி எடுத்து நடித்துள்ளேன். “தலைவருக்காக உயிரைக் கொடுக்கும் நண்பனாக நடித்தது எனக்கு அளவற்ற மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

தலைவர் விஜய் அவர் நடனம் ஆடுவதையோ, சண்டைக் காட்சிகளில் கலக்குவதையோ அல்லது படம் பெரிய வெற்றியைப் பெறுவதையோ பார்த்துவிட்டு, ‘நீங்க நிஜமாவே கிரேட்’ என்று அவரிடம் கூறுவேன். அதற்கு அவர், ‘நான் கிரேட் இல்லை, என்னை படைத்த அந்த ஆண்டவன் தான் கிரேட்’ என்று மிக எளிமையாகக் கூறுவார். தேர்தலின்போது தூத்துக்குடியில் நீ எப்படிப் போய் போட்டியிட முடியும்? அது திமுகவின் கோட்டை, உன்னை அங்கே யாரும் மதிக்க மாட்டார்கள், நீ தோற்றுவிடுவாய்” எனப் பலர் தன்னை மனரீதியாக சோர்வடையச் செய்தார்கள்.

தென்மாவட்ட மக்கள் மீதும், தன் மக்கள் மீதும் நம்பிக்கை வைத்துத் தேர்தலைச் சந்தித்தேன். அவர்கள் என்னை அமோகமாக வெற்றி பெறச் செய்துள்ளனர். தொடக்கத்தில் என்னை ஒரு ஐயங்கார் என்று நினைத்தார்கள். தூத்துக்குடிக்காரர்களுக்கு உன்னை எப்படித் தெரியும் எனக் கேட்டார்கள். ஆனால் நான் எல்லாருக்குமானவன், பொதுவானவன். சிலுவை போட்டால் நான் கிறிஸ்தவன், குல்லா போட்டால் நான் முஸ்லிம், பட்டை போட்டால் நான் இந்து. நான் எல்லா மக்களுக்குமானவன் என்று கூறியுள்ளார்.

இறுதியாக, தன்னை கைவிடாமல் அமோகமாக வெற்றி பெறச் செய்த தூத்துக்குடி மக்களுக்கும், த.வெ.க-விற்கு (தமிழக வெற்றிக் கழகம்) ஆதரவளித்த அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றிகளை ஸ்ரீநாத் தெரிவித்துக் கொண்டார்.

Source link