ஜனநாயகன் டைட்டில் கார்டில் முதல்வர் சி. ஜோசப் விஜய்!

நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பே வெளிவந்திருக்க வேண்டியது. ஆனால், சென்சார் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக தடைபட்டது. இந்நிலையில் நடிகர் விஜய் தமிழக முதல்வராக பதவியேற்ற 75 நாட்களுக்குப் பிறகு, தற்போது இந்தப் படம் வெளியாகியுள்ளது.ஜனநாயகன் திரைப்படம், தமிழகத்தில் 1000 திரைகளிலும், இந்தியா முழுக்க 3,000 திரைகளிலும், உலகம் முழுக்க ஐந்தாயிரத்துக்கும் அதிகமான திரைகளிலும் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.

ஜனநாயகன் திரைப்படத்தின் டைட்டில் கார்டில் முதல்வர் விஜயின் சட்டசபை சைகைக் காட்சி இடம்பெற்றுள்ளது மேலும் “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்” என்ற பெயருடன் கோட் சூட் அணிந்த புகைப்படமும், எதிர்க்கட்சிகளை நோக்கி அவர் செய்த சிறப்பான சைகையும் இணைக்கப்பட்டு திரையரங்குகளில் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆரவாரத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

பல தடைகளை சந்தித்த போதிலும் கடைசியாக ஜனநாயகன் படம் இன்று ரிலீஸ் ஆனது. இந்தப் படம் நிச்சயம் சாதனை படைக்கும் என்று ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் கொண்டாடுகின்றனர்.

Source link