‘ஜனநாயகன்’ திரைப்படத்தை பார்த்து ரசித்த முதல்வர் விஜய்!

முதல்வர் விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ பல்வேறு பிரச்சனைகளைக் கடந்து ஒருவழியாக நாளை(23.07.2026) வெளியாகவுள்ளது. முதல்வராக முதல் படம் சினிமாவில் கடைசி படம் என்ற சூழ்நிலையில் வெளியாகவுள்ளதால் விஜய்யின் ரசிகர்களும் தவெக-வின் தொண்டர்களும் படத்தை வரவேற்க தயாராகி வருகின்றனர். மேலும் அமைச்சர் ஆனந்த் திருவிழா போல் பிரம்மாண்டமாகக் கொண்டாட வேண்டும் என்பதால் பேனர், போஸ்டர், கொடி எனத் திரையரங்கை ரசிகர்களும் நிர்வாகிகளும் அலங்கரித்து வருகின்றன. இன்னும் சில பேர் கோவிலுக்கு சென்று பூஜையும் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், தான் நடித்த ஜனநாயகன் திரைப்படத்தை முதல்வர் விஜய் கண்டுகளித்துள்ளார். சென்னை அடையாறு தாகூர் திரைப்பட கல்லூரியில் நாளை வெளியாகவுள்ள ஜனநாயகன் திரைப்படத்தை முதல்வர் விஜய் பார்த்து ரசித்துள்ளார். 

Source link