ஜனநாயகன் படத்தின் நீக்கப்பட்ட 6 காட்சிகள்; இணையத்தில் வெளியாகும் என இயக்குநர் சூசகம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜய். இவர் சமீபத்தில்  அரசியலில் களம் கண்டு தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார். இதனிடையே,  அவரது நடிப்பில் உருவான ’ஜனநாயகன்’ படமே, அவரது இறுதி படமாக இருக்கும் என்று முன்னதாக தகவல்கள் வெளியாகின. லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட விஜய் சினிமாவில் இருந்து வெளியேறுவது, அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது . மேலும், அவரது நடிப்பில் உருவான ஜனநாயகன் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது.  

அந்த வகையில், கடந்த பொங்கல் பண்டிகையின் போது வெளியாக இருந்த ஜனநாயகன் படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், தணிக்கை சான்று காரணமாக இப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. படத்தில் சில காட்சிகளை நீக்குமாறு தணிக்கை வாரியம் அறிவுறுத்தியது.  

இதையடுத்து, தொடர் சிக்கலின் காரணமாக இப்படம் வெளியாவதில் சிக்கல் நீடித்து வந்தது. இதனிடையே இப்படம் இணையத்தில் கசிந்தது. இந்த சம்பவம் திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.  

இந்நிலையில், பல மாதங்களுக்குப் பிறகு படத்தில் சில காட்சிகள் மாற்றப்பட்டும்,  சில காட்சிகள் நீக்கப்பட்டும், இப்படம் தணிக்கை சான்று பெற்றுக் கடந்த 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம், விஜயின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதனால் இப்படம் இது வரை 250 கோடி வரை வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.  

இந்நிலையில், இப்படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதாவது இறுதிக்கட்ட படத்தொகுப்பின் போது, இப்படத்தின் 6 காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. அந்த காட்சிகள் விரைவில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. இது குறித்து, இயக்குநர் எச் வினோத் கூறுகையில், இப்படத்தில் 2 காமெடி காட்சிகள் 2 சண்டைக் காட்சிகள் 2 செண்டிமெண்ட் காட்சிகள் ஆகியவை நீக்கப்பட்டுள்ளன. அவை விரைவில் வெளியிடப்படும் என இயக்குநர் எச்.வினோத் தெரிவித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.  இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Source link