முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகம் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இதனை ஒட்டி தமிழகம் முழுவதும் ஜனநாயகன் திரைப்படம் வெளியான திரையரங்குகளில் தவெக தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் ஆடிப்பாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை போத்தனூர் அரசன் திரையரங்கில் ஜனநாயகன் திரைப்படம் வெளியாகி உள்ளது. காலை முதலே திரையரங்க வாயிலில் குவிந்த ரசிகர்கள் பட்டாசுகளை வெடித்தும், விஜய்யின் பாடல்களுக்கு நடனமாடியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சூழலில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திரையரங்கத்திற்கு வந்த அமைச்சர் விக்னேஷ் தன்னை யாரும் வீடியோ எடுக்க வேண்டாம் என்று கூறியபடி திரையரங்கிற்குள் நுழைந்தார்.
தொடர்ந்து, சட்டமன்றத்தில் விஜய் செய்த ஆக்சன் உடன், மாண்புமிகு முதலமைச்சர் விஜய் என்ற டைட்டிலுடன், படத்தைப் பார்த்த ரசிகர்கள் ஆரவாரம் செய்து திரையரங்கிற்குள் நடனமாடி உற்சாகமடைந்தனர்.
அமைச்சர் விக்னேஷ் சென்ற வழியில் ரசிகர்கள் யாரையும் அனுமதிக்காத போலீசார், திரையரங்க வாயிலுக்கு வெளியே துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பிற்காக நின்றனர். இந்த நிலையில், ஜனநாயகன் படம் பார்க்க சென்ற அமைச்சர் விக்னேஷ் பாதுகாப்புக்கு சென்ற துப்பாக்கி ஏந்திய போலீஸ், தியேட்டர் வாசலில் துப்பாக்கி ஏந்தி நின்றது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
