எம்ஜிஆர், விஜய் இருவருக்கும் உள்ள ஒற்றுமை :
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் கடைசிப் படமான ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ (1978) திரைப்படம் வெளியான பிறகு முழு நேர அரசியலில் ஈடுபட்ட அரசியல்வாதியாக மாறிய எம்.ஜி.ஆர் தனது வாழ்நாளில் இறுதி நாள் வரை முதலமைச்சராக பதவி வகித்தார். அதேபோல், தற்போது முதலமைச்சர் விஜய்யின் கடைசி படமாக ‘ஜனநாயகன்’ அமைந்துள்ளது.
இருப்பினும், இதில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க வித்தியாசம் உள்ளது. எம்.ஜி.ஆர் முதலமைச்சரான பிறகு வெளியான படங்களில் ‘மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்’ என்று மட்டுமே டைட்டில் கார்டு போடப்பட்டது. ஆனால் இன்றைய முதலமைச்சர் விஜய்யின் ’ஜனநாயகன்’ திரைப்படத்தில் ’மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்’ என டைட்டில் கார்டு போடப்பட்டுள்ளது. இது விஜய் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது முதலமைச்சர் என்ற டைட்டில் கார்டு இடம்பெறாததற்கு தொழில்நுட்பமே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
விஜய்யின் திரைவாழ்வின் ஆரம்ப காலகட்டங்களில் ‘விஜய்’ என்று மட்டுமே டைட்டில் கார்டு போடப்பட்டது.
‘விஜய்’ —> ‘இளைய தளபதி’ —-> ‘தளபதி’ என உருவெடுத்த அவரது திரைப்பயணம், இன்று ‘முதலமைச்சர் விஜய்’ என்ற உச்சத்துடன் நிறைவடைவது தொண்டர்களையும் ரசிகர்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
