முதலமைச்சர் ஜோசப் விஜய் நடிப்பில் உருவான கடைசிப் படம் ஜனநாயகன். இந்தப் படம் தயாரிக்கப்பட்டு திரைக்கு வர பல மாதங்கள் ஆனது. கடைசியில், ‘ஏ’ சான்றிதழுடன் இன்று 23ந் தேதி திரைக்கு வந்தது. ஊழலை ஒழிப்பதாக பதவி ஏற்றுள்ள முதலமைச்சர் ஜோசப் விஜயின் ஜனநாயகன் படத்திற்கான டிக்கெட் வழக்கம் போல அதிக கட்டணத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ரசிகர்கள் குமுறி உள்ளனர்.
இந்த நிலையில் தான் புதுக்கோட்டையில் படம் பார்த்த தவெக அமைச்சர் முகமது பர்வேஸ் கேமராக்களை பார்த்ததும் குலுங்கி குலுங்கி அழுதார். இந்தக் காட்சியை பல கேமராக்கள் காட்சிப்படுத்தியது.
மற்றொரு பக்கம் அமைச்சர் பஸ்வேஸின் அறந்தாங்கி நகரில் உள்ள ஒரு திரையரங்கில் ரசிகர்களின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தைப் பார்த்த திரையரங்க உரிமையாளர் திரைக்கு முன்னால் நின்று ஆடி திரையை சேதப்படுத்திவிடக் கூடாது என்பதற்காக முன் எச்சரிக்கையாக சீமைக்கருவேல முள்ளை வெட்டி வந்து திரை மேடை முழுவதும் போட்டு வைத்து திரையை பாதுகாத்துக் கொண்டார். ஜோசப் விஜய் ரசிகர்களிடம் இருந்து திரையை பாதுகாக்க முள் தடுப்பு வைத்தது பரபரப்பாக பேசப்படுகிறது.
