ஜப்பான் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறிய ரிபாகினா, லேலா பெர்னாண்டஸ்

Summary

ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றுக்கு கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, கனடாவின் லேலா பெர்னாண்டஸ் ஆகியோர் முன்னேறினர்.

ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 2வது சுற்றில் கனடாவின் லேலா பெர்னாண்டஸ், பெல்ஜியத்தின் எலைஸ் மெர்டன்ஸ் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய லேலா பெர்னாண்டஸ் 6-2, 7-6 (10-8) என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா 6-2, 6-3 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீராங்கனையான யூலியா புடின்சேவாவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் காலிறுதி போட்டியில் எலினா ரிபாகினா, கனடாவின் லேலா பெர்னாண்டசை எதிர்கொள்கிறார்.

Source link