ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் பட்டம் வென்றார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து

நமது சிறப்பு நிருபர்

ஜப்பான் ஓபன் 2026 பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பி.வி. சிந்து பெற்றார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், ‘சூப்பர் 750’ அந்தஸ்து பெற்ற ஜப்பான் ஓபன் பாட்மின்டன் தொடர் நடைபெற்றது. பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில், உலகின் ‘நம்பர்-10’ இந்தியாவின் சிந்து 31, டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் கைப்பற்றிய, உலகின் ‘நம்பர்-4’ சீனாவின் சென் யுபெய் 28, மோதினர்.

முதல் செட்டை 21-19 எனக் கைப்பற்றிய சிந்து, இரண்டாவது செட்டில் 15-10 என முன்னிலையில் இருந்த போது, காயத்தால் சீன வீராங்கனை பாதியில் விலகினார். இதனையடுத்து சிந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, பைனலுக்கு தகுதி பெற்றார். பைனலில் சிந்து, உலகின் ‘நம்பர்-3’ ஜப்பானின் அகானே யமாகுச்சியை சந்தித்தார்.

ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய பி.வி.சிந்து 21-17, 21-17 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் பெற்று அசத்தினார். ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் பெற்றவரான பிவி சிந்து கடந்த 2 ஆண்டாக சர்வதேச பட்டம் எதுவும் வெல்லாத நிலையில், தற்போது சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

Source link