ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து சாம்பியன்

வரலாற்று சாதனை படைத்த வீராங்கனை பி.வி.சிந்து

ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்துவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் அவர் என்பது இந்த சாதனையை மேலும் சிறப்பாக்குவதாகவும், இது நாடு முழுவதும் உள்ள எண்ணற்ற இளம் விளையாட்டு வீரர்களை விளையாடி ஜொலிக்கத் தூண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி டி20 போட்டி 

ஜிம்பாப்வேவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேச அணி, தொடரையும் 2-க்கு 1 என்கிற கணக்கில் வென்றது.

டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஜிம்பாப்வே அணி,20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 143 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச அணி, 19.4 ஓவர்களில் இலக்கை எட்டி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியது.

விராட் கோலி, ரோகித் சர்மா புதிய சாதனை

இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் 400 சர்வதேச போட்டிகளில் இணைந்து விளையாடிய வீரர்கள் என்ற பெருமையை பெற்றனர். இங்கிலாந்திற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பங்கேற்றதன் மூலம் இந்த புதிய சாதனையை படைத்துள்ளனர்.

Source link