நமது நிருபர்
இன்னும் பல போட்டிகள் காத்திருக்கின்றன. ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு என்னால் வெற்றி பெற முடிந்திருப்பது நிம்மதி அளிக்கிறது என இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தெரிவித்துள்ளார்.
ஜப்பான் ஓபன் பாட்மின்டன் ஒற்றையரில் இந்திய வீராங்கனை சிந்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: நான் மகிழ்ச்சியடைகிறேன், அதே வேளையில் இன்னும் பல போட்டிகள் காத்திருக்கின்றன. ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு என்னால் வெற்றி பெற முடிந்திருப்பது நிம்மதி அளிக்கிறது. வரவிருக்கும் போட்டிகளில் இதேபோல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, இது எனக்கு நிச்சயம் மிகுந்த தன்னம்பிக்கையை அளிக்கும்.
ஜப்பான் வீரர் யமகுச்சியுடன் விளையாடும்போதெல்லாம் போட்டிகள் நீண்டதாகவும், அதிக உடல் உழைப்பு தேவைப்படுபவையாகவும் இருந்திருக்கின்றன. அதற்கு நான் தயாராகவே இருந்தேன். நான் முன்னிலையில் இருந்தபோதும் கூட, நான் தளர்வடையவில்லை; ஏனெனில் முன்னிலையில் இருந்தபோதிலும் அவர் வலுவாகத் திரும்பி வந்து ஆதிக்கம் செலுத்திய தருணங்கள் முன்பு இருந்திருக்கின்றன.
பயிற்சியின் போது, எனது ஆட்டம், உடற்தகுதி, வேகம் அல்லது எதில் மாற்றங்கள் தேவை என்பது குறித்து எனது பயிற்சியாளரும் நானும் தொடர்ந்து விவாதித்தோம். யிற்சியாளர் இர்வன்ஸ்யா எப்போதும் போல அர்ப்பணிப்புடன் செயல்பட்டார். அவர் கவனத்துடன் இருந்தார், மேலும் என் மீது நம்பிக்கை வைத்திருப்பதை எனக்குத் தொடர்ந்து நினைவூட்டினார். யிற்சியின் போது அனைத்தும் சிறப்பாகச் செல்வதால், முடிவுகள் தானாகவே வரும் என்று அவர் என்னிடம் தொடர்ந்து கூறி வந்தார். இவ்வாறு பி.வி.சிந்து கூறியுள்ளார்.
