ஜியோ பிளாட்பார்ம்ஸ் ஐபிஓ முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்; பங்குச்சந்தையில் 21% கூடுதல் விலைக்கு விற்பனை

-நமது சிறப்பு நிருபர்-

உலகிலேயே ஒரு கோடிக்கும் மேலான விண்ணப்பங்களை பெற்ற முதல் ஐ.பி.ஓ., என்ற சாதனையை ஜியோ படைத்துள்ளது. ஜியோ ஐ.பி.ஓ., வெளியீட்டின் இறுதியில், மொத்தம் 22.19 மடங்கு விண்ணப்பங்கள் வந்தன. அதிகபட்சமாக, தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள் பிரிவில் 70.55 மடங்கு விண்ணப்பங்கள் வந்தன. முதலீட்டாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

கடந்த வாரத்தில் ரூ.1,119க்கு ஐபிஓ., வெளியிடப்பட்ட நிலையில், இன்று (அக்டோபர் 28) பங்குச்சந்தையில் ரூ.1359க்கு விற்பனையாகிறது. இது, 21 சதவீதம் கூடுதலாகும். நிறுவனத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்தது. மும்பையில் ஜியோ பிளாட்பார்ம்ஸின் பங்குச் சந்தை அறிமுக விழா கோலாகலமாக நடந்தது.

உங்களால் உருவானது!

இதுவரை இல்லாத வகையில் ரூ.30,213 கோடி ஐபிஓ வெளியீடு முக்கியத்தும் பெற்றது. நிகழ்சியில் ரிலையன்ஸ் இண்டஸ்ரீஸ் நிர்வாக இயக்குநர் அனந்த் அம்பானி பேசுகையில், ”ஜியோ குடும்பத்தின் உறுப்பினர்களுக்கு நன்றி; உங்களால் உருவானது ஜியோ. உங்களுடைய கனவை நிறைவேற்றுவது தான் எங்கள் நோக்கம்; பிரதமர் மோடிக்கு நன்றி”, என்றார்.

முதலீட்டாளர்களுக்கு நன்றி!

ரிலையன்ஸ் ஜியோ தலைவர் ஆகாஷ் அம்பானி பேசுகையில், ”ஜியோ பிளார்ட்பார்ம்ஸ் ஐபிஓ வெளியீடு வெற்றி பெற்றுள்ளது. எனக்கு புதிய அனுபவத்தை கொடுத்தது. ஜியோவின் புதிய பங்குதாரர்களுக்கும், வெற்றிக்கு காரணமான ஒவ்வொரு முதலீட்டார்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

50 ஆண்டுகளில் ரிலையன்ஸ் செய்ததை அடுத்த 50 ஆண்டுகளுக்கு ஜியோ செய்யும்; உலக அளவில் முக்கிய நிறுவனமாக ஜியோவை மாற்றுவோம். இந்தியாவில் இணைய சேவை வசதி மேம்பட்டு இருக்கிறது, மலை பகுதிகளிலும் தற்போது ஜியோ இணைய சேவையை வழங்கி கொண்டு இருக்கிறோம்” என்றார்.

Source link