மதுமிதா இயக்கத்தில், கற்பனை, காதல் மற்றும் நகைச்சுவை கலந்த 8 எபிசோடுகளைக் கொண்ட தொடராக உருவாகியுள்ளது ‘லவ் ஆல்வேஸ்’. இத்தொடரில் கௌரி ஜி. கிஷன், ரம்ஸான் முஹம்மது, ஜெயபிரகாஷ், ஜெயசுதா மற்றும் மாயா கிருஷ்ணன் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் பள்ளி பிரதீப் குமார் ரெட்டி, மைதிலி சத்யஜித், டிம்பிள் கண்ணா கே, ஆத்விக் ரவிச்சந்திரன், சூரஜ் சீதாராமன், ஸ்மிருதி மோகன்குமார், சதாசிவம் சூரியநாராயணன் மற்றும் ராமசுவாமி முருகையா ஆகியோரும் நடித்துள்ளனர்.
இத்தொடரின் பின்னணியில் எழுத்தாளர்கள் சபரிவாசன் ஷண்முகம் மற்றும் ஃபசல் நவாப், ஒளிப்பதிவாளர் மெய்யேந்திரன், படத்தொகுப்பாளர் ராதா ஸ்ரீதர், ஆடை வடிவமைப்பாளர்கள் பிரியா ஹரி மற்றும் பிரியா கரண், இசை அமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன், கலை இயக்குநர் சேகர் பாலு ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.
இந்தத் தொடர், உறவுகள், எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் மாயாஜால ஜானரில் உருவாகியுள்ளது. அந்த மாயாஜாலம் உறவுகளைத் தலைகீழாக மாற்றி, காதல் எதிர்பாராத ஒரு திருப்பத்தைச் சந்தித்தால் என்னவாகும்? இதை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த தொடர் அக்டோபர் 30ஆம் தேதி முதல் ஜியோஹாட்ஸ்டாரில் பிரத்யேகமாக வெளியாகவுள்ளது. இத்தொடரின் 8 எபிசோடுகளும் அக்டோபர் 30 அன்று ஜியோஹாட்ஸ்டாரில் மட்டுமே ஒரே நேரத்தில் வெளியாகின்றன.
