தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்து கிட்டத்தட்ட மூன்று மாதங்களை கடந்துள்ள நிலையில், தாம்பரம் மாநகராட்சியில் ரூ.45 லட்சம் மதிப்பிலான டெண்டரில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. டெண்டர் விடப்படுவதற்கு முன்பே பணிகள் முடிக்கப்பட்டு, அதன்பிறகு டெண்டர் கோரப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
முதலீடுகளை ஈர்ப்பதற்காக தொழில்முறை பயணமாக முதலமைச்சர் விஜய் லண்டன் சென்றுள்ள நிலையில், அவரது ஆட்சியில் எழுந்துள்ள இந்த டெண்டர் முறைகேடு குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
ஊழலற்ற ஆட்சி என்ற வாக்குறுதிக்கு மத்தியில் சர்ச்சை
தேர்தல் பிரச்சார காலம் முதலே ஊழல், லஞ்சம் மற்றும் முறைகேடுகளற்ற ஆட்சியை வழங்குவதே தங்களது அடிப்படைக் கொள்கை என தவெக தரப்பில் வலியுறுத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ரூ.45 லட்சம் மதிப்பிலான பணிக்கான டெண்டர் நடைமுறையில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு, தமிழக அரசியல் களத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெண்டருக்கு முன்பே பணிகள் முடிந்ததாக புகார்
இந்த விவகாரம் தொடர்பாக அறப்போர் இயக்கம் முன்வைத்துள்ள முக்கியகுற்றச்சாட்டு,டெண்டர் விடப்படுவதற்கு முன்பே சம்பந்தப்பட்ட பணிகள் முடிக்கப்பட்டுவிட்டன என்பதாகும்.
மேலும், பணிகள் முன்கூட்டியே முடிக்கப்பட்ட பின்னர் டெண்டர் கோரப்பட்டதாகவும், இதன் மூலம் டெண்டர் நடைமுறை விதிகள் மீறப்பட்டிருக்கலாம் என்றும் அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.
இதுமட்டுமின்றி, பணிகளை முன்கூட்டியே முடித்துவிட்டு பின்னர் டெண்டர் விடப்பட்ட விவகாரத்தில் கூட்டுச்சதி நடைபெற்றிருக்கலாம் என்றும், இது நிர்வாக ரீதியிலான ஊழல் எனவும் அந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
ஜூலையில் திறப்பு… ஆகஸ்டில் டெண்டர் ?
அறப்போர் இயக்கம் சுட்டிக்காட்டியுள்ள மற்றொரு முக்கிய தகவல், அமைச்சர் சரத்குமார் ஜூலை மாதம் திறந்து வைத்த சிலை தொடர்பான பணியாகும்.
அந்த சிலை அமைக்கும் பணி ஜூலை மாதத்திலேயே திறந்து வைக்கப்பட்ட நிலையில், அதற்கான டெண்டர் ஆகஸ்ட் மாதத்தில்தான் விடப்பட்டதாக அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.
டெண்டர் விடுவதற்கு முன்பே பணி நிறைவடைந்திருந்தால், அந்த பணிக்கான ஒப்பந்த நடைமுறை எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது என்ற கேள்வியையும் அறப்போர் இயக்கம் எழுப்பியுள்ளது.
முதல்வர் விஜய் அரசுக்கு அறப்போர் இயக்கம் புகார்
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் (DVAC) உள்ளிட்ட அமைப்புகளிடமும் அறப்போர் இயக்கம் புகார் அளித்துள்ளது.
மேலும், இந்த விவகாரத்தில் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்றும் அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஸ்ரீதர் வேம்பு போட்ட X பதிவு!திமுகவை சீண்டினாரா? சர்ச்சைக்கு காரணம் என்ன?
தவெக அரசு ஊழலற்ற நிர்வாகத்தை முன்னிறுத்தி வரும் நிலையில், ஆட்சியின் தொடக்க காலத்திலேயே மாநகராட்சி டெண்டர் தொடர்பாக எழுந்துள்ள இந்த குற்றச்சாட்டு அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது.
Source link
