ஜெம் விரமணி வழக்குல் போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் மேற்க்கொண்டு வருகின்றனர். நேற்று ஜெம் வீரமணிக்கு பாலியல் வழக்கில் உதவியாக இருந்த அவரது மேலாளர் சக்திவேக் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், ஜெம் வீரமணி வழக்கில் தொடர்புடைய போலீசார் யாரும் கைது செய்யப்பட்டமல் இருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பும் படியாக உள்ளது என மக்கள் கூறி வருகின்றனர்.
தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய தொழில் அதிபர் ஜெம் வீரமணி மீதான பாலியல் மற்றும் போக்சோ வழக்கு தினந்தோறும் பூதாகரமாக வெடித்து வருகிறது. நேற்று அவரது மேலாளர் சக்திவேல் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்தச் சூழலில் இதுவரை ஜெம் வீரமணி வழக்கில் தொடர்புடைய மற்றும் அவரிடம் பணம் பெற்றதாகக் கூறப்படும் எந்த ஒரு போலீசார்களும் ஏன் கைது செய்யப்படவில்லை என மக்கள் சந்தேகக் கேள்வி எழுப்புகின்றனர்.
மேலும் ஒரு போக்சோ புகார்
இந்த வழக்கில் மேலும் அவர் மீது சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வழக்குகள் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு வருகிறது. முன்னதாக 6 சிறுமிகள் ஜெம் வீரமணி மீது புகார் அளித்திருந்த நிலையில், நேற்று மேலும் ஒரு சிறுமி ஜெம் வீரமணியால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகி உள்ளதாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
ஜெம் வீரமணி மற்றும் அவருக்கு உதவியவர்கள் என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று சிறப்பு புலனாய்வுப் போலீசார், ஜெம் வீரமணியின் மேனேஜர் சக்திவேல் என்பவர் மூலம் வீரமணி, சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பிக்கப் பணப் பரிமாற்றம் நடைபெற்றதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் வீரமணியின் பண்ணை வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கைதாகும் ஜெம் வீரமணி ஊழியர்கள்
இதுவரை இந்த ஜெம் வீரமணி வழக்கு தீவிரமடையத் தொடங்கிய நாள் முதல் அவருக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகியோர் என முழுவதும் அவருக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும், அவரது ஊழியர்கள் மட்டுமே போலீசாரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். நேற்று இந்த வழக்கில் பணப் பரிமாற்றம் நடந்ததாகக் கூறப்படும் நிலையில், அதற்கு உதவியாக இருந்த சக்திவேல் கைது செய்யப்பட்டார். ஆனால் இதுவரை பணம் பெற்ற போலீசார்கள் மற்றும் அதிகாரிகள் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. மேலும் அவர்களை விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
போலீசாரைக் காக்க முயல்கிறதா அரசு
ஜெம் வீரமணி வழக்கை முதல்வர் விஜய் தனிக் கவனம் எடுத்து அதிரடியாகப் பல நடவடிக்கைகள் எடுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரிக்கை எழுந்த போதிலும், தமிழ்நாடு காவல்துறையினர் சார்பில், கூடுதல் ஆணையர் பி.சி. தென்மொழி தலைமையில் பெண் போலீஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகள் யார், யாரெல்லாம் பணம் பெற்று ஜெம் வீரமணிக்கு உதவினர், யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்ற தகவல்கள் போலீசார் தரப்பில் இருந்து சொல்லப்படாமல் உள்ளது. இதனால் தமிழ்நாடு அரசும், காவல்துறையும் தங்களது டிபார்ட்மெண்ட் அதிகாரிகளைக் காக்க முயல்கிறதா என எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
காவல்துறை முன்னெடுத்த நடவடிக்கைகள்
ஜெம் வீரமணி மீது புகார் அளிக்க சிறப்பு எண் வெளியீடு ஜெம் வீரமணி, உதவியாளர் சாந்தி மற்றும் அவரது கணவர் மீது குண்டாஸ் பதியப்பட்டது அடுத்தடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய ஜெம் வீரமணியிடம் பணிபுரிந்த ஊழியர்கள் கைது
Source link
