முன்னாள் பெண் எம்.எல்.ஏ-வை ஒருமையில் பேசிய பெரியகருப்பன்? சிவகங்கை தி.மு.க-வில் வெடித்த மோதல்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நடைபெற்ற திமுக கட்சி மறுசீரமைப்பு ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பனுக்கும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ. தமிழரசிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கூட்டத்தில் பரபரப்பு நிலவியதுடன், ஆலோசனைக் கூட்டமும் பாதியில் முடிவடைந்தது.

தி.மு.க.,வில் ஓட்டு எண்ணிக்கையின் அடிப்படையில் ஒன்றியங்களைச் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி ஆகிய பகுதிகளுக்கான சீரமைப்புக் கூட்டம் நடைபெற்றது. மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இளையராஜா பார்வையாளராக கலந்து கொண்டார்.

காலையில் மானாமதுரை மற்றும் திருப்புவனம் ஒன்றியங்களுக்கான சீரமைப்புப் பணிகளுக்கான கூட்டம் முடிந்தது. மாலையில் இளையான்குடி பகுதியில் உள்ள ஒரு ஒன்றியத்திற்கான சீரமைப்பு விவாதம் துவங்கியது. அப்போது, முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பன் ஆதரவாளர்களுக்கும், முன்னாள் அமைச்சர் தமிழரசி ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு இரு முன்னாள் அமைச்சர்களுக்கு இடையேயும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

பெரியகருப்பன் தன்னை பெரியகருப்பன் ஒருமையில் பேசியதாக கூறி அவரிடம் தமிழரசியும், ஆதரவாளர்களும் வாக்குவாதம் செய்தனர். இருதரப்பினர் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. மேலும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மதியரசனின் தரப்பினரைச் சுட்டிக்காட்டி, அவர்கள் தமிழரசியின் அறிவுறுத்தலின் பேரில் செயல்படுகிறார்களா? என்று பெரியகருப்பன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழரசியின் ஆதரவாளர்கள் பெரிய கருப்பனின் வாகனத்தையும் சூழ்ந்து கொண்டதால் பதட்டமான நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தலைமைக் கழகப் பார்வையாளர் இளையராஜா அவசரமாக வெளியேறினார்.

Source link