தீபக் ரவி கல்யாணம்: தற்போது தமிழ் திரையுலகில் இரண்டு திருமணங்கள் குறித்து தான் அதிகம் பேசப்படுகிறது. ஒன்று அனிருத், காவ்யா மாறன் திருமணம். மற்றொன்று தீபக் ரவி, செந்தாமரையின் திருமணம் ஆகும். அது யார் தீபக் ரவி என கேட்கிறீர்களா?. பெரும் தொழில் அதிபரும், சினிமா தயாரிப்பாளருமான கண்ணன் ரவியின் அருமை மகன்.
ஜீவா நடிப்பில் வெளியான தம்பி தலைவர் தலைமையில் படத்தை தயாரித்தவர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் டெக்ஸ்லா படத்தை கண்ணன் ரவி தான் தயாரித்து வருகிறார். அவர் மகனுக்கு மனைவியாகப் போகும் செந்தாமரை வேறு யாரும் அல்ல திமுக மூத்த தலைவரான துரைமுருகனின் மகன் எம்.பி. கதிர் ஆனந்தின் மகள்.
ஸ்பெஷல் அழைப்பு: தீபக் ரவி, செந்தாமரையின் திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஜூலை மாதம் திருவிழா மாதிரி நடந்தது. அதில் திரையுலக பிரபலங்கள், திமுகவினர் என பலர் கலந்து கொண்டார்கள். இதையடுத்து நவம்பர் மாதம் 1ம் தேதி அவர்களின் திருமணம் நடக்கவிருக்கிறது. திருமணம் என்றால் ஒரு நாளுடன் முடிந்துவிடுவது இல்லை. அக்டோபர் 28ம் தேதி துவங்கி நான்கு நாட்கள் கொண்டாட்டமாக நடக்கவிருக்கிறது.
இந்நிலையில் பிரபலங்களுக்கு அழைப்பிதழ் கொடுத்திருக்கிறார் தயாரிப்பாளர் கண்ணன் ரவி. அழைப்பிதழ் என்றால் வெறும் பேப்பர் பத்திரிகை கிடையாது. அது ஒரு டப்பா. டப்பாவுக்குள் அப்படி என்ன இருக்குமோ என வியந்த நிலையில் அதற்கு ஜெயிலர் 2 படத்தில் நடித்த சுராஜ் வெஞ்சாரமூடு பதில் கொடுத்துவிட்டார்.
சுராஜ் வீடியோ: சுராஜுக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அவர் அதை அன்பாக்ஸ் செய்திருக்கிறார். டப்பாவை பிரித்தால் அதில் மயில் சிறகு அழகாக விரிகிறது. நடுவில் தங்க நிறத்தில் பிள்ளையார் அமர்ந்திருக்கிறார். ஒரு பகுதியை இழுத்தால் அழைப்பிதழ் வருகிறது. இன்னொரு இடத்தில் பாட்டில்களில் சாப்பிடும் பொருட்கள் இருக்கிறது. இப்படி கண் கவரும் வகையில் சில பொருட்களை வைத்து அதை எல்லாம் ஒரு டப்பாவாக கொடுத்து எங்கள் வீட்டு விசேஷத்திற்கு தவறாமல் வந்துவிடவும் என அழைத்திருக்கிறார்கள்.
பத்திரிகை டப்பாவை பிரித்துப் பார்த்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்திருக்கிறார் கண்ணன் ரவி. அடேங்கப்பா, பத்திரிகைக்கு மட்டுமே பெரும் தொகை செலவு செய்திருப்பார்கள் போலயே என பேச வைத்திருக்கிறார்கள். அது சரி, பெரும் பணக்காரராக இருக்கும் கண்ணன் ரவி தன் மகன் கல்யாணத்திற்கு இப்படி செலவு செய்யாமல் யாருக்கு செய்வார்.
ரஜினிகாந்த் மகள்: தீபக் ரவி, சொந்தாமரையின் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டது போன்றே திருமணத்திலும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துவார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த திருமணத்தை அடுத்து தன் மாமா மகன் அனிருத்தின் திருமணத்தில் கலந்து கொள்ள கிரீஸ் செல்கிறார். திருமணம் நடக்கும் கிரீஸுக்கு செல்ல ரஜினிகாந்த் குடும்பத்தாருக்கு என தனி விமானமே ஏற்பாடு செய்திருக்கிறார் மணமகள் காவ்யாவின் தந்தை கலாநிதி மாறன்.
இதற்கிடையே அனிருத், காவ்யா மாறன் திருமண பத்திரிகையும் டப்பா போன்று தான் இருந்தது. அதற்குள் என்ன இருக்கும் என்பதை யாராவது சொல்ல மாட்டார்களா என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்
அனிருத், காவ்யாவின் திருமணம் நவம்பர் 11ம் தேதி வெளிநாட்டில் குடும்பத்தார் முன்பு நடக்கிறது. அதன் பிறகு சென்னையில் நடக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் ஸ்டார்கள் எல்லாம் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.
Source link
