‘ஜெயிலர் 2’ வசூல் – தமிழ் சினிமாவில் புது சாதனை!

நெல்சன் – ரஜினிகாந்த் கூட்டணியில் கடந்த 15ஆம் தேதி வெளியான ‘ஜெயிலர் 2’ படம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, வித்யா பாலன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் விஜய் சேதுபதி, ஹிருத்திக் ரோஷன் உள்ளிட்டோரும் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். 

இப்படம் குடும்பங்கள் கொண்டாடும் வகையில் ஒரு கேங்க்ஸ்டர் படமாக அமைந்து வசூலையும் வாரி குவித்துள்ளது. அதன்படி 6 நாள் நிலவரப்படி ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ரூ.549 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இதன் மூலம் முதல் வாரத்தில் அதிக வசூலை ஈட்டிய தமிழ் படமாக இப்படம் அமைந்துள்ளது. 

இதனால் ரஜினி ரசிகர்களும் தமிழ் சினிமா ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் இந்த வசூல் வரும் வாரங்களில் அதிகரிக்கக்கூடும் எனவும் எதிர்பார்க்கின்றனர். காரணம் தமிழ் சினிமாவில் ரூ.1000 கோடி வசூல் வெறும் கனவாகவே இருந்து வருகிறது. ஆனால் இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய துறைகள் தொடர்ந்து இந்த இமாலய சாதனையைச் செய்து வருகிறது. இந்த சாதனை பட்டியலில் ஜெயிலர் 2 படம் மூலம் தமிழ் சினிமாவும் இணையும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். அது நடக்கும் என்றும் நம்புகின்றனர். 

The record maker and the record breaker!😎
549+ CRORES WORLDWIDE!
The highest-grossing first week collections in Tamil cinema history! 💥 #Jailer2#Jailer2 Industry Mega Blockbuster 🔥@rajinikanth@Nelsondilpkumar@anirudhofficial@vidya_balan@iam_SJSuryah#MithunChakraborty… pic.twitter.com/wCzecyLGxz