ஜெயிலர் 2-வில் சந்தானம் – வெளியான வீடியோ!

நெல்சன் – ரஜினிகாந்த் கூட்டணியில் கடந்த 15ஆம் தேதி வெளியான ‘ஜெயிலர் 2’ படம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, வித்யா பாலன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் விஜய் சேதுபதி, ஹிருத்திக் ரோஷன் உள்ளிட்டோரும் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். 

இப்படம் குடும்பங்கள் கொண்டாடும் வகையில் ஒரு கேங்க்ஸ்டர் படமாக அமைந்து வசூலையும் வாரி குவித்துள்ளது. முதல் வாரத்தில் உலகளவில் ரூ. 549 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இதன் மூலம் முதல் வாரத்தில் அதிக வசூலை ஈட்டிய தமிழ் படமாக இப்படம் சாதனை படைத்துள்ளது. வரும் வாரங்களில் வசூல் இன்னும் அதிகரிக்கக்கூடும் என திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இப்படத்தில் சந்தானம் நடித்துள்ளதாக முன்பு தகவல்கள் வெளியானது. இதை உறுதிப்படுத்தும் வகையிலும் சந்தானம் ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசியிருந்தார். இதனால் அவரை எதிர்பார்த்துப் போன ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. அவர் நடித்த காட்சிகள் படத்தில் இடம் பெறவில்லை. இதனால் எடிட்டிங்கில் தூக்கப்பட்டிருக்குமோ எனச் சிலர் ரசிகர்கள் யூகித்தனர். இந்த நிலையில் அதனை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.

நடிகை வித்யா பாலன் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதில் சந்தானமும் இருந்துள்ளார். ஆனால் ரசிகர்கள் யூகித்தது போல் அவரது காட்சிகள் எடிட்டிங்கில் படத்தின் நீளம் கருதி வெட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனிடையே அவரது காட்சிகள் படத்தில் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என ஒரு தரப்பு ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

pic.twitter.com/fNSVeTlt1o