சபேஷ், தேவா: கானா பாடல்களை பிரபலமாக்கிய தேனிசைத் தென்றல் தேவாவுக்கு அக்டோபர் 17ம் தேதி காலை மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றும் காப்பாற்ற முடியவில்லை. தேவா இறந்த மாதத்தை பார்த்ததுமே அவரின் தம்பி சபேஷ் மரணம் தான்பலரின் நினைவுக்கு வந்தது.
தேவாவின் நான்கு தம்பிகளில் ஒருவரான இசையமைப்பாளர் சபேஷ் 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23ம் தேதி காலமானார். உடல்நலக்குறைவுக்காக சிகிச்சை பெற்று வந்த அவர் இறந்தார். அவருக்கு வயது 68. சபேஷ் இறந்து ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் அவர் போன்றே அக்டோபர் மாதம் தேவா மரணம் அடைந்தார்.
கார்த்திக் சபேஷ் உயிரிழப்பு: தம்பி போன ஒரு வருடத்திற்குள் அண்ணனும் போய்விட்டாரே என நலம்விரும்பிகள், ரசிகர்கள் வேதனைப்பட்டார்கள். ஆனால் தேவா இறந்த நான்காவது நாள் காலை அவர் குடும்பத்தில் மேலும் ஒரு மரணம் ஏற்பட்டது. சபேஷின் மகன் நடிகர் கார்த்திக் காலமானார். 37 வயதான கார்த்திக் சபேஷுக்கு உடல்நலம் பாதித்து மருத்துவமனையில் அனுமதித்திருந்தார்கள். அங்கு கார்த்திக்கிற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் கூட காப்பாற்ற முடியாமல் போய்விட்டது.
அப்பா சபேஷ் அக்டோபர் 23, மகன் கார்த்திக் அக்டோபர் 20, பெரியப்பா தேவா அக்டோபர் 17ம் தேதி என ஒரு வருடத்திற்குள் அந்த இசை குடும்பத்தை சேர்ந்த மூன்று திறமைசாலிகள் இறந்துவிட்டார்கள். அதில் சபேஷ் மற்றும் கார்த்திக் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இறந்தார்கள். ஆனால் தேவா அப்படி இல்லை. ஆரோக்கியமாக இருந்தார். சினிமா நிகழ்ச்சிகளில் பங்கேற்று எப்பொழுதும் போன்று அடுத்தவர்களின் திறமையை பாராட்டி பேசி வந்தார்.
காலை நடந்த விஷயம்: அக்டோபர் 17ம் தேதி காலை கார்த்திக்கை பார்த்துவிட்டு வரலாம் என மருத்துவமனைக்கு கிளம்பினார் தேவா. வீட்டில் இருந்து கிளம்பும் முன்பு காபி கேட்டுவிட்டு உட்கார்ந்திருந்தவர் அப்படியே சாய்ந்து விழுந்து உயிரிழந்தார். அவருக்கு இப்படி மாரடைப்பு வந்து அது உயிரை பறித்துவிடும் என யாருமே எதிர்பார்க்கவில்லை.
ஜெய், தேவா உறவு: இந்நிலையில் கோலிவுட்டின் பிரபலமான நடிகர்களில் ஒருவரான ஜெய்க்கும், தேவாவுக்கும் இடையே என்ன உறவு என்று ரசிர்கள் கேட்கிறார்கள். ஜெய் அப்பா சம்பத்தின் அண்ணன் தான் தேவா. ஆக, பெரியப்பா முறை.
ஜெய்க்கு தன் பெரியப்பா தேவா என்றால் உயிர் என நடிகர் ராதாரவி ஒரு முறை பேட்டியில் தெரிவித்திருந்தார். அப்பா, பெரியப்பா வழியில் இசையில் சாதிக்கும் ஆசை ஜெய்க்கு உண்டு. அதனால் தான் லண்டனில் கீபோர்டு வாசிக்க கற்றுக் கொண்டார்.ஜெய்க்கு கடவுள் வேறு ஒரு திட்டம் வைத்து அவரை நடிகராகிவிட்டார். ஜெய் தன் பெரியப்பா தேவா பற்றி முன்பு பேட்டிகளில் பேசியபோது அவர் முகத்தில் இருந்த சந்தோஷமே பாசத்தை காட்டிக் கொடுத்தது.
என் பெரியப்பா எப்பொழுதும் கரெக்டாக இருப்பார். கீ போர்டு வாசிக்காமல் ரோட்டில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தால், டேய் என்பார். அதுவே ஸ்டுடியோவில் கீ போர்டு வாசித்தால் பாராட்டுவார் என முன்பு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார் ஜெய்.
சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்
சக்கரமல்லூரில் நடந்த தேவாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட ஜெய்யை பார்த்து பலர் ஆறுதல் கூறினார்கள். அந்த சோகமே மாறாத நிலையில் நேற்று தன் தம்பி கார்த்திக்கை இழந்துவிட்டார் அவர்.
Source link
