சென்னை:
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, நவம்பர் 1 முதல் தமிழகத்தில் மழையின் அளவு படிப்படியாக அதிகரிக்கும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை காலை அந்தமான் கடல் பகுதியில் உருவான இப்புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அக்டோபர் 31-க்குள் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாவட்ட வாரியான மழை விவரம்:
நவம்பர் 1:
திருச்சி, கரூர், நாமக்கல், சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்கள், வடகடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள், அத்துடன் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நவம்பர் 2:
கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகப் பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நவம்பர் 3:
நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கான எச்சரிக்கை தொடரும். மேலும், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரித்துள்ளது.
