திண்டுக்கல் மதுவிலக்கு ஆயத் தீர்வை அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சட்டவிரோதமாக ‘சீலிங்’ முறையில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகார் குறித்த கேள்விக்கு சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு எச்சரிக்கை “ஒருமுறை கைது செய்யப்பட்டால் பிணையில் வெளியே வந்துவிட்டு மீண்டும் அதே தவறைச் செய்துவிடலாம் என்று யாரும் நினைக்க வேண்டாம்.
சட்டவிரோத மது விற்பனை நடவடிக்கை
.அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டவிரோதமாக விற்கப்படும் மது பாட்டில்களில் உள்ள ‘க்யூ.ஆர் கோடு’ (QR Code) ஸ்கேன் செய்யப்பட்டு, அந்த பாட்டில் எந்த டாஸ்மாக் கடையில் இருந்து, எந்த டிப்போவில் இருந்து விற்பனையானது என்பது வரை துல்லியமாகக் கண்டறியப்படும். இந்த முறைகேட்டில் ஈடுபடும் சில்லறை விற்பனையாளர்கள் மட்டுமின்றி, அவர்களுக்கு மதுபானங்களை விநியோகம் செய்த டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வரை அனைவரும் கடுமையான சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவார்கள்.
அறிக்கை அரசியலில் திமுக?உதயநிதி செய்வது என்ன?
திண்டுக்கல்லுக்கு வருகை தந்தவுடனேயே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாஸ்மாக் மூத்த மண்டல மேலாளர் மற்றும் மாவட்ட மேலாளர் ஆகியோருடன் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தி, தனது துறை சார்ந்த எந்தவொரு இடத்திலும் தவறு நடக்கக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருக்கிறேன்.
டாஸ்மாக் ஊழியர்களுக்கு செக்..
‘ரெஸ்டோ பார்’ என்பது ஒரு விவாத அளவில் மட்டுமே இருந்து வருகிறது. உணவகம் இருக்கக்கூடிய மதுக்கடைகளைத் தமிழக அரசு கொண்டு வர உள்ளதாகக் கூறப்படுகிறதே? என்ற கேள்விக்கு 234-வது முறையாக இதற்குப் பதில் சொல்கிறேன், கேளுங்கள். அந்த ‘ரெஸ்டோ பார்’ என்பது ஒரு விவாத அளவில் மட்டுமே இருந்து வருகிறது.
தனியார்மயத்தை விவாதிக்கிறீர்களா என்றால்.. ஆமாம். நாங்கள் இந்தத் துறையைச் சரி செய்வதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கிறோம். ஆனால், மக்கள் வேண்டாம் என்று சொல்லும் எந்தவொரு விஷயத்தையும் இந்த அரசு செய்யாது. இந்தத் துறையை முதலமைச்சர் என்னிடம் ஒப்படைக்கும்போது, “இந்தத் துறையில் நிறைய கசிவுகள் இருக்கின்றன.
எதிர்க்கட்சிகளின் தூண்டுதலால் தான் போராட்டம் நடப்பதாகக் கூறுவதை தவறென்று தொழிற்சங்கங்கள் மறுக்கிறது குறித்த கேள்விக்கு உண்மையைச் சொன்னால், முதலமைச்சரின் வழியில் இந்தத் துறையில் யாரையும் ஒரு ரூபாய் கூட திருட விடமாட்டோம். ஊழியர்களின் பின்னால் நின்றுகொண்டு, அவர்கள் முகமூடியைப் போட்டுக்கொண்டு நீங்கள் என்ன போராட்டம் நடத்தினாலும், உங்களை ஒரு ரூபாய் கூட திருட விடமாட்டோம் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
போராட்டக் களத்தில் இருக்கும் தொழிலாளர்கள் காலமுறை ஊதியம் பெறத்தானே கோரிக்கை வைக்கிறார்கள் என்ற கேள்விக்கு தொழிலாளர்களுக்காகக் குரல் கொடுப்பவர்கள் கடந்த 23 வருடங்களாகப் போராடி ஏதாவது உருப்படியாக வாங்கித் தந்திருக்கலாமே? 10 ரூபாய் உயர்வு வாங்கித் தருவதுதான் இவர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியா? அது தொழிலாளர்களுக்குச் செய்யும் நன்மையா?
QR Code’ ஸ்கேனரில் மாட்டப்போகும் அதிகாரிகள்
இந்த 23 ஆண்டுகளில் அவர்களுக்குக் காலமுறை ஊதியத்தையோ அல்லது பணி நிரந்தரத்தையோ ஏன் வாங்கித் தரவில்லை? அவர்களின் நோக்கம் தொழிலாளர்களுக்கு நன்மை செய்வதும் அல்ல. அரசு மறைமுகமாக எதையும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட வேண்டும், தாங்கள் பயனடைய வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் நான் நிச்சயமாக அப்படி விட்டுவிட மாட்டேன்.
இதைத் தடுப்பதற்கு என்னென்ன வழிகள் இருக்கிறதோ, அத்தனையும் அரசு செய்யும். தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரிக்கை குறித்து அரசின் முடிவு என்ன? என்ற கேள்விக்கு தற்போதைய நிதி நிலைமைக்கு ஏற்பவே முடிவுகள் எடுக்கப்படுகின்றன. தொழிலாளர்கள் ரூ.14,000 வாங்குகிறார்கள், அது போதாது என்பதால் தான் முதற்கட்டமாக ரூ.3,500 முதல் ரூ.5,000 வரை உயர்த்த முன்வந்தோம். இது வெறும் முதற்கட்டம்தான், இதோடு முடிந்துவிட்டது என நினைக்க வேண்டாம். கோரிக்கைகள் படிப்படியாக நிச்சயமாகச் செயல்படுத்தப்படும்.
