டாஸ்மாக் பணியாளர்களுக்கு குறைந்தது பணி – எல்லாம் ஆன்லைனில் – tasmac employees workload reduced – everything moves online

டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளின் விற்பனை, சரக்கு இருப்பு விவரம் இனி நொடியில் கிடைக்கும். நவீன End to End System-ல் எல்லாம் துல்லியமாக கிடைக்க நடவடிக்கை. நவ.1ஆம் தேதி முதல் குறுஞ்செய்தி மூலம் சரக்கு இருப்பு பணிகள் நிறுத்தம் என அறிவிப்பு.

மாவட்டம் தோறும் டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் இருந்து தினசரி விற்பனை விவரத்தினை SMS (குறுஞ்செய்தி) மூலம் பெறுவதை நவ.1ஆம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்த மேலாண்மை இயக்குநர் நந்தகுமார் அனைத்து மாவட்ட மேலாளர்கள் மற்றும் மண்டல மேலாளர்களுக்கு அனுப்பியுள்ளார்.

இதுவரை டாஸ்மாக் கடையில் என்ன நடந்தது ?

மாவட்ட வாரியாக, டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளில் நடைபெறும் தினசரி விற்பனை விவரங்களும், கடைகளில் உள்ள சரக்கு இருப்பு விவரங்களும் இதுநாள்வரை பணியாளர்களிடமிருந்து குறுஞ்செய்தி (SMS) வாயிலாகவும், Mobile App மற்றும் Google Sheet மூலமாகவும் மாவட்ட மேலாளர் அலுவலகங்களுக்கு பெறப்பட்டு வந்தன. அதாவது கடை பணியாளர் தினமும் கடையை பூட்டிய பிறகு, இன்று எவ்வளவு விற்றோம், எவ்வளவு சரக்கு இருக்கு என்று SMS அனுப்ப வேண்டும்.

இப்போது ஏன் இந்த முடிவு? முக்கிய காரணம் இதுதான்

தற்போது, அனைத்து டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளின் விற்பனை மற்றும் சரக்கு இருப்பு விவரங்களும் End to End System மூலம் உடனுக்குடன் துல்லியமாக கிடைக்கப்பெறுவதால், அதாவது புதிய நவீன கம்ப்யூட்டர் சிஸ்டம் (End to End System) வந்துவிட்டது. ஒரு பாட்டில் விற்றால் கூட உடனே சென்னை தலைமை அலுவலகத்தில் தெரிந்துவிடும். ஸ்டாக் எவ்வளவு உள்ளது, விற்பனை எவ்வளவு என்று நொடிக்கு நொடி துல்லியமாக தெரியும்.

அதனால் இனி பணியாளர்களிடமிருந்து தனியாக SMS வாயிலாக விவரங்களை பெறும் பழைய நடைமுறையை 01.11.2026 முதல் நிறுத்துமாறு தெரிவிக்கப்படுகிறது என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குறுஞ்செய்தி அனுப்புவது நிறுத்தப்பட்டால் என்ன பயன் ?

பணியாளர்களுக்கு வேலை குறைவு: தினமும் SMS அனுப்பும் சிரமம் இனி இல்லை . துல்லியமான கணக்கு: மனித தவறு இல்லாமல், சிஸ்டத்தில் நேரடியாக கணக்கு வரும். மோசடிக்கு வாய்ப்பு இல்லை. நவீனமயம்: டாஸ்மாக் முழுவதும் டிஜிட்டல் ஆகிறது .நவம்பவர் 1ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளில் SMS யுகம் முடிந்து, End to End டிஜிட்டல் யுகம் ஆரம்பம் என்றே சொல்லலாம்

Source link